Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL SSLC GGHSS ALDY

Total questions: 51

Worksheet time: 26mins

Name
Class
Date
1.

மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

a)

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b)

பெரும் வணிகமும் பெரும்கலன்களும்

c)

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

d)

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2.

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

a)

இலையும் சருகும்

b)

தோகையும் சண்டும்

c)

தாளும் ஓலையும்

d)

சருகும் சண்டும்

3.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

a)

எந்+தமிழ்+நா

b)

எந்த+தமிழ்+நா

c)

எம்+தமிழ்+நா

d)

எந்தம்+தமிழ்+நா

4.

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே-

a)

பாடிய-கேட்டவர்

b)

பாடல்-பாடிய

c)

கேட்டவர்-பாடிய

d)

பாடல்-கேட்டவர்

5.

வேர்க்கடலை,மிளகாய் விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை-

a)

குலை வகை

b)

மணி வகை

c)

கொழுந்து வகை

d)

இலை வகை

6.

”உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நடங்கள் யாவை?

a)

உருவகம், எதுகை

b)

மோனை, எதுகை

c)

முரண், இயைபு

d)

உவமை, எதுகை

7.

”பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணா்த்தும் அறிவியல் செய்தி யாது?

a)

கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

b)

கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

c)

கடல் நீர் ஒலித்தல்

d)

கடல் நீர் கொந்தளித்தல்

8.

பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

a)

பண்புத்தொகை

b)

உவமைத்தொகை

c)

அன்மொழித்தொகை

d)

உம்மைத்தொகை

9.

சரியான விடைவரிசையைத் தோ்ந்தெடுக்க

a)

கொண்டல் - வடக்கு

b)

கோடை - மேற்கு

c)

வாடை - தெற்கு

d)

தென்றல் - கிழக்கு

10.

“சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி” என்னும் அடியில் பாக்கம் என்பது-

a)

புத்தூர்

b)

மூதூர்

c)

பேரூர்

d)

சிற்றூர்

11.

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது?

a)

வேற்றுமை உருபு

b)

எழுவாய்

c)

உவம உருபு

d)

உரிச்சொல்

12.

காசிக்காண்டம் என்பது

a)

காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்

b)

காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

c)

காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

d)

காசி நகரத்தின் வழிப்படுத்தும் நூல்

13.

விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி உணா்த்தும் விருந்து போற்றிய நிலை-

a)

நிலத்திற்கேற்ற விருந்து

b)

இன்மையிலும் விருந்து

c)

அல்லிலும் விருந்து

d)

உற்றாரின் விருந்து

14.

உனதருளே பார்ப்பன் அடியேனே - யாரிடம் யார் கூறியது?

a)

குலசேகராழ்வாரிடம் இறைவன்

b)

இறைவனிடம் குலசேகராழ்வார்

c)

மருத்துவரிடம் நோயாளி

d)

நோயாளியிடம் மருத்துவர்

15.

பரியாடல் அடியில் “விசும்பும் இசையும்” என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

a)

வானத்தையும் பாட்டையும்

b)

வானத்தையும் புகழையும்

c)

வானத்தையும் பூமியையும்

d)

வானத்தையும் பேரொலியையும்

16.

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

a)

துலா

b)

சீலா

c)

குலா

d)

இலா

17.

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணா்த்தும் செய்தி

a)

சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

b)

காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

c)

பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

d)

சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

18.

அருந்துணை என்பதைப் பிாித்தால்---------------

a)

அருமை+துணை

b)

அரு+துணை

c)

அருமை+இணை

d)

அரு+இணை

19.

”இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது --------------வினா.

”அதோ,அங்கே நிற்கும்.” என்று மற்றொருவர் கூறியது ---------விடை.

a)

ஐயவினா, வினா எதிா் வினாதல்

b)

அறிவினா, மறை விடை

c)

அறியா வினா, சுட்டு விடை

d)

கொளல் வினா, இனமொழி விடை

20.

”அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை”

-என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

a)

தமிழ்

b)

அறிவியல்

c)

கல்வி

d)

இலக்கியம்

21.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவா்----------இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்------------

a)

அமைச்சர், மன்னன்

b)

அமைச்சர், இறைவன்

c)

இறைவன், மன்னன்

d)

மன்னன், இறைவன்

22.

குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்------

a)

முல்லை,குறிஞ்சி, மருத நிலங்கள்

b)

குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

c)

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

d)

மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

23.

ஒயிலாட்டத்தில் இரு வாிசையில் நின்று ஆடுகின்றனா். இத்தொடாின் செயப்பாட்டு வினைத் தொடா் எது?

a)

ஒயிலாட்டத்தில் இருவாிசையில் நின்று ஆடுவா்

b)

ஒயிலாட்டத்தில் இருவாிசையில் நின்று ஆடப்படுகிறது

c)

ஒயிலாட்டம் இருவாிசையில் நின்று ஆடப்படுகிறது

d)

ஒயிலாட்டம் இருவாிசையில் நின்று ஆடப்படுகின்றாா்.

24.

மலர்கள் தரையில் நழுவும் எப்போது?

a)

அள்ளி முகா்ந்தால்

b)

தளரப் பிணைத்தால்

c)

இறுக்கி முடிச்சிட்டால்

d)

காம்பு முறிந்தால்

25.

கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவா். இத்தொடருக்கான வினா எது?

a)

கரகாட்டம் என்றால் என்ன?

b)

கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?

c)

கரகாட்டத்தின் வேறுவேறு வடிவங்கள் யாவை?

d)

கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

26.

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a)

நல்ல உள்ளம் உடையவா்கள் இல்லாததால்

b)

ஊரில் விளைச்சல் இல்லாததால்

c)

அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d)

அங்கு வறுமை இல்லாததால்

27.

சாியான அகர வாிசையைத் தேர்ந்தெடுக்க.

a)

உழவு, மண், ஏா், மாடு

b)

மண், மாடு, ஏா், உழவு

c)

உழவு, ஏா், மண், மாடு

d)

ஏா், உழவு, மாடு, மண்

28.

மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் - மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே-

a)

திருப்பதியும் திருத்தணியும்

b)

திருத்தணியும் திருப்பதியும்

c)

திருப்பதியும் திருச்செந்தூரும்

d)

திருப்பரங்குன்றமும் பழனியும்

29.

தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீா்த்தித் தொடா் உணா்த்தும் பொருள்-

a)

மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவா்

b)

மிகுந்த செல்வம் உடையவா்

c)

பண்பட்ட மனிதநேயம் கொண்டவா்

d)

நெறியோடு நின்று காவல் காப்பவா்

30.

இருநாட்டு அரசா்களும் தும்பைப் பூவைச் சூடிப் போாிடுவதன் காரணம்---------

a)

நாட்டைக் கைப்பற்றல்

b)

ஆநிரை கவா்தல்

c)

வலிமையை நிலைநாட்டல்

d)

கோட்டையை முற்றுகையிடல்

31.

தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது------

a)

திருக்குறள்

b)

புறநானூறு

c)

கம்பராமாயணம்

d)

சிலப்பதிகாரம்

32.

மேன்மை தரும் அறம் என்பது----

a)

கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

b)

மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

c)

புகழ் கருதி அறம் செய்வது

d)

பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

33.

வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் - இவ்வடி குறிப்பிடுவது-----------

a)

காலம் மாறுவதை

b)

வீட்டைத் துடைப்பதை

c)

இடையறாது அறப்பணி செய்தலை

d)

வண்ணம் பூசுவதை

34.

”உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன்” என்றும் ”பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன்” என்றும் பாராட்டப்படுவோர்

a)

உதியன்-சேரலாதன்

b)

அதியன்-பெருஞ்சாத்தன்

c)

பேகன்-கிள்ளிவளவன்

d)

நெடுஞ்செழியன்-திருமுடிக்காரி

35.

காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடா்-----

a)

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

b)

என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

c)

இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்

d)

என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

36.

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் --------

a)

அகவற்பா

b)

வெண்பா

c)

வஞ்சிப்பா

d)

கலிப்பா

37.

”இவள் தலையில் எழுதியதோ

கற்காலம்தான் எப்போதும்...” -இவ்வடிகளில் கற்காலம் என்பது

a)

தலைவிதி

b)

பழைய காலம்

c)

ஏழ்மை

d)

தலையில் கல் சுமப்பது

38.

சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது.

a)

அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

b)

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

c)

அறிவியல் முன்னேற்றம்

d)

வெளிநாட்டு முதலீடுகள்

39.

பூக்கையைக் குவித்துப் பூவே புாிவொடு காக்க என்று ------------, -------------- வேண்டினார்.

a)

கருணையன், எலிசபெத்துக்காக

b)

எலிசபெத், தமக்காக

c)

கருணையன், பூக்களுக்காக

d)

எலிசபெத், பூமிக்காக

40.

வாய்மையே மழை நீராகி - இத்தொடரில் வெளிப்படும் அணி

a)

உவமை

b)

தற்குறிப்பேற்றம்

c)

உருவகம்

d)

தீவகம்

41.

கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் - இக்கூற்றிலிருந்து நாம் புாிந்து கொற்வது.

a)

தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்

b)

சமூகப் பாா்வையோடு கலைப்பணி புாியவே எழுதினாா்

c)

அறத்தைக் கூறுவதற்காக எழுதினாா்

d)

அழகியலுடன் இலக்கியம் படைத்தாா்

42.

நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்று கூறியவர்?

a)

பாவலரேறு பொருஞ்சித்திரனாா்

b)

க.சச்சிதானந்தன்

c)

பாரதியார்

d)

நப்பூதனாா்

43.

"சதம்” என்பதன் பொருள்

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

பத்தாயிரம்

44.

தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி

a)

ஜால்ரா

b)

பறை

c)

உறுமி

d)

தவில்

45.

பிள்ளைத்தமிழ் வகை

a)

10

b)

7

c)

2

d)

3

46.

கம்பராமாயணம் ---------------- காண்டம் உடையது

a)

7

b)

6

c)

5

d)

8

47.

சிலப்பதிகாரம் ------------ காண்டம் உடையது

a)

3

b)

6

c)

2

d)

4

48.

தி.சோ.வேணுகோபாலன் பிறந்த ஊர்

a)

திருவையாறு

b)

சிறுகூடல்பட்டி

c)

உறுவையாறு

d)

தஞ்சாவூர்

49.

தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே மலா்வது

a)

குறிஞ்சி

b)

மூங்கில்

c)

பிரம்ம கமலம்

d)

சண்பகம்

50.

காிசல் எழுத்தாளா்கள் வாிசையில் மூத்தவா்

a)

கி.ராஜநாராயணன்

b)

ஜெயகாந்தன்

c)

கு.அழகிாிசாமி

d)

புதுமைப்பித்தன்

51.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

கம்பர்

b)

திருவள்ளுவர்