Worksheetsஒலி வேறுபாடு
Total questions: 20
Worksheet time: 10mins
தீபாவளி கலைநிகழ்ச்சி லிட்டில் இந்தியாவில் நடைபெற்றது. அதை மாறன் தன் குடும்பத்தினரோடு கண்டு ________________.
கழித்தான்
களித்தான்
அரவிந்தன் மரத்தில் கயிறு கட்டி விளையாடினான். ஆனால், சிறிது நேரத்தில் அவன் கட்டிய கயிறு _______________ கீழே விழுந்தது.
அருந்து
அறுந்து
பள்ளியில் ஆண்டு விழாவிற்கான நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. அதனால், மாணவர்கள் தங்கள் பள்ளியை அலங்கரிக்கும் _______________ ஈடுபட்டிருந்தனர்.
பணியில்
பனியில்
மரகதம் தன் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவில்லை. அதனால், திருடர்கள் பணத்தை _______________ அடித்தனர்.
கொள்ளை
கொல்லை
கலா, ஈரச் சந்தைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றார். அங்கு அவர் குறைந்த _______________ நிறைய பொருட்கள் வாங்கினார்.
விளையில்
விலையில்
திடீரென்று _________ பொழிந்ததால் ஆர்ச்சட்
சாலையில் வெள்ளம் ஏற்பட்டது.
மாரி
மாறி
சிங்கப்பூரர்கள் விடாமுயற்சியுடனும் கடின உழைப்புடனும் பணியாற்றுகின்றனர். அதனால்தான் நம் நாடு ___________ மிக்க நாடாகத் திகழ்கிறது.
வலம்
வளம்
பூங்கொடி எதிர்காலத்தில் ஒரு மருத்துவராக விரும்பினாள். அதற்காக அவள் தனது மேற்படிப்பை வெளிநாட்டு பல்கலை ___________________ தொடர்ந்தாள்.
கழகத்தில்
கலகத்தில்
வேடன் ஒருவன் தன் மீது __________________
தொடுப்பதைக் குறிப்பால் அறிந்த மான், அவ்விடத்தை விட்டு துள்ளிக் குதித்து ஓடி மறைந்தது.
கனை
கணை
கலை நிகழ்ச்சி தொடங்க இன்னும் ____________ மணி நேரம் இருந்தது. ஆனால் பார்வையாளர்கள் முன்னதாகவே அரங்கத்துக்கு வந்துவிட்டார்கள்
அரை
அறை
வெப்பக் காலங்களில் மோர் அருந்துவது நல்லது. இந்த ____________ உடலுக்குக் குளிர்ச்சியோடு நோய் எதிர்ப்புச் சக்தியும் தருகிறது.
பானம்
பாணம்
சீதாவும் ராதாவும் சண்டையிட்டுக்கொண்டனர். ஆனால் தவறேதும் செய்யாத தன்னை ராதாதான் தாக்கினாள் என்று சீதா ஆசிரியரிடம் _______ மூட்டினாள்.
கோல்
கோள்
திருமதி சிந்துவுக்கு நடன _______ மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு நடனப் பள்ளியை நடத்தி வருகிறார்.
கலையில்
களையில்
வெளிநாட்டிற்குச் செல்லும்போது, எனக்கு மிருகங்களின் மீது சவாரி செய்ய ஆசை. அதனால், என் அப்பா என்னை ______________ மீது ஏறி சவாரி செய்ய அனுமதி கொடுத்தார்.
கரி
கறி
ரக்ஷனுடைய பிறந்தநாளைக் கொண்டாட அவன் குடும்பத்தினர் அவனை அழைத்துக்கொண்டு அஞ்சப்பர் உணவகத்திற்குச் சென்றனர். அங்கு இருந்த ____________ வாசனை ரக்ஷனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
குழம்பின்
குளம்பின்
மல்லிகா தினமும் உடற்பயிற்சி செய்தாள். அதனால் அவள் மூன்று மாதத்தில் உடல் _______________ காணப்பட்டாள்.
இளைத்து
இழைத்து
இவ்வருட இறுதி ஆண்டுத் தேர்வில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ராமு தீர்மானித்தான். அதனால், அவன் அதிக ________________ எடுத்துத் தன் பள்ளிப் பாடங்களைப் படிக்கிறான்.
அக்கறை
அக்கரை
பள்ளி விடுமுறை அன்று குமுதா பூங்காவில் மிதிவண்டி ஓட்டச் சென்றாள். அங்கே பறந்துகொண்டிருந்த ______________ ஒன்று அவளைக் கொட்டியது.
குளவி
குழவி
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிகப் பொறுப்பு வகிக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் நற்பெயர் வாங்கினால் பெற்றோர்தான் __________ மகிழ்ச்சி அடைவர்.
பெறும்
பெரும்
அந்தக் காலச் சிறுவர்கள் அதிகமாக ________________
விளையாடினார்கள். இந்தக் காலச் சிறுவர்கள் அதை வைத்து விளையாடுவதில்லை.
கோழி
கோலி
