NEW
Font size
WorksheetsPTA-5
Total questions: 14
Worksheet time: 2mins
1. கூற்று: தற்காப்பு பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்திய பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம்:அமெரிக்கா கடன்பட்ட நாடுகளுக்கு பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.
அ. கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ. கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ. கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
ஈ. காரணம் சரி, ஆனால் கூற்றுக்கு பொருந்தவில்லை.
2.1914 முதல் 1918 வரை மற்றும் 1939 முதல் 1945 வரை நடைபெற்ற இரண்டு போர்களும் உலகப்போர்கள் என்று குறிப்பிடுவதற்கு காரணம்.
அ. மோதல்கள் நடைபெற்ற பகுதிகள் பரந்து விரிந்தநக்ஷதாக இருந்தன.
ஆ. ஆயுதமேந்திப் போரிட்டோர், பொது மக்கள் ஆகியோரின் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
இ. ஐரோப்பிய, ஆசிய, ஆப்ரிக்கக் கண்டங்களில் பல முனைகளில் போர்கள் நடைபெற்றன.
ஈ. இவை அனைத்தும்
3.(i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின்கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கனின் படைகளோடு இணைந்து சென்றன.
(ii)காளையார் கோவில் போரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டபின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணை புரிந்தனர்.
(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால் நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.
(iv) காரன்வாலிஸ் மே 1799 இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.
அ.(i) மற்றும்( ii) ஆகியவை சரி.
ஆ.(ii) மற்றும்( iii) ஆகியவை சரி.
இ. (ii) (iii) மற்றும் (iv)ஆகியவை சரி.
ஈ. (I) மற்றும் (iv)ஆகியவை சரி
4. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ. 1858ஆம் ஆண்டு சட்டம்
ஆ. இந்திய கவுன்சில் சட்டம் 1909
இ. இந்திய அரசுச் சட்டம் 1919
ஈ. இந்திய அரசுச் சட்டம் 1935
5. அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய_______ நீதிக் கட்சியால் நிறுவப்பட்டது.
அ. மத்திய பணியாளர் தேர்வு ஆணையம்
ஆ. பொதுப்பணி ஆணையம்
இ. மாநில பணியாளர் தேர்வு வாரியம்
ஈ. பணியாளர் தேர்வாணையம்
6. கூற்று: பழங்கள் காய் வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத்துறையாகும்.
காரணம்:உலக அளவில் இந்தியா மா,வாழை மற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
அ.கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி,காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கானகாண சரியான விளக்கம் அல்ல
இ. கூற்று சரி, காரணம் தவறு
ஈ. கூற்று தவறு காரணம் சரி
7. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி..
அ. மைக்கா
ஆ. சுண்ணாம்புக்கல்
இ. ஜிப்சம்
ஈ. செம்பு
8. எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து.
அ. சாலைப் போக்குவரத்து
ஆ. இரயில் போக்குவரத்து
இ. வான்வழிப் போக்குவரத்து
ஈ. நீர்வழிப் போக்குவரத்து.
9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்________
அ. தர்மபுரி
ஆ. வேலூர்
இ. திண்டுக்கல்
ஈ. ஈரோடு
10. முறை வரைகலை தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் டெல்டா______
அ. காவிரி டெல்டா
ஆ. மகாநதி டெல்டா
இ. கோதாவரி டெல்டா
ஈ. கிருஷ்ணா டெல்டா
11. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 வழங்குவது
அ. சட்டத்தின் முன் அனைவரும் சமம்
ஆ. பாகுபடுத்துவதைத் தடை செய்தல்
இ. சம வாய்ப்பளித்தல்
ஈ. பட்டங்களை நீக்குதல்
12. சட்ட மேலவை என்பது
அ. 5ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
ஆ.6 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
இ. நிரந்தர அவை ஆகும்
ஈ.4 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
13.GDPயில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது.
அ. வேளாண் துறை
ஆ. தொழில்துறை
இ. பணிகள் துறை
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை
14. நியாயமான வர்த்தக உணவுப் பொருட்களுள் இடம் பெறாத ஒன்று எது?
அ. காபி
ஆ. கோ கோ
இ. தேன்
ஈ. கைவினைப் பொருட்கள்
