wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Science C19 E6

Total questions: 20

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள் எது ஒரு பொருளின் வடிவத்தை உற்றறியப் பயன்படும் புலன் ஆகும்?

a)

கேட்டல்

b)

பார்த்தல்

c)

நுகர்தல்

d)

சுவைத்தல்

2.

பின்வரும் எது தொடுதல் புலனுடன் தொடர்புடையது அல்ல?

a)

ஒரு குவளையில் உள்ள நீரின் வெப்பநிலையை அறிதல்.

b)

ஒரு பாத்திரத்தில் உள்ள சீனி தூளின் மென்மையை அறிதல்.

c)

இசைக்கருவியின் ஒலியை அறிதல்.

d)

மணற்தாளின் சொர சொரப்பை அறிதல்.

3.

பின்வரும் எது நுகர்தலின் அவசியத்தைக் காட்டுகிறது?

a)

உணவு பொருள் உண்பதற்கு ஏதுவானதா என்பதை அறியலாம்.

b)

உணவின் சுவையை அறியலாம்.

c)

உணவு பொருளின் விலையை அறியலாம்.

d)

உணவு பொருளின் கலவையை அறியலாம்.

4.

பரிசோதனையின் போது, சோதனைக் குழாயில் உள்ள இராசயனப் பொருள் உன் நண்பன் நுகர முற்படுகிறான். நீ என்ன செய்வாய்?

a)

அவனுடன் சேர்ந்து நுகருவேன்.

b)

அதனை நுகர்ந்து வாசனையை குறித்து வைத்துக் கொள்வேன்.

c)

அதனை நுகரக் கூடாது என அறிவுரைக் கூறுவேன்

d)

சுவாசக் கவசம் அணியச் சொல்வேன்.

5.

பின்வரும் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?

a)

உற்றறிதல்

b)

தொடர்பு கொள்ளுதல்

c)

வகைப்படுத்துதல்

d)

சுயமாக முடிவெடுத்தல்

6.

எறும்பிற்கு எத்தனை கால்கள் இருக்கிறன என்பதனை உற்றறிய எந்தக் கருவி உதவும்?

a)

தொலைநோக்காடி

b)

நிலைக் கண்ணாடி

c)

உருப்பெருக்கி

d)

மறைநோக்காடி

7.

அட்டவணை 1, விலங்குகள் இரண்டு குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

முட்டையிடும் குட்டிப்போடும்

கோழி ஆடு

முதலை புலி

பறவை கரடி

இந்த அட்டவணை எந்த அறிவியல் செயற்பாங்குடன் தொடர்புடையது?

a)

ஊகித்தல்

b)

வகைப்படுத்துதல்

c)

அனுமானித்தல்

d)

தொடர்பு கொள்ளுதல்

8.

பின்வரும் தகவல் ஓர் ஆய்வில் கிடைக்கப்பெற்ற கூற்று ஆகும்.


நீர் வெப்பப்படுத்தும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க நீரின் வெப்பநிலை அதிகரிக்கிறது.


இந்த கூற்று எந்த அறிவியல் செயற்பாங்குடன் தொடர்புடையது?

a)

கருதுகோள் உருவாக்குதல்

b)

அனுமானித்தல்

c)

வகைப்படுத்துதல்

d)

தொடர்பு கொள்ளுதல்

9.

பின்வருபவை பரிசோதனை செய்தலின் வழிமுறையைக் காட்டுகிறது.


P - பரிசோதனை மேற்கொள்ளுதல்

R - ஆய்வுக் கருவிகளைத் தயார் செய்தல்

Q - முடிவினை எழுதுதல்

S - பரிசோதனையைத் திட்டமிடுதல்


பரிசோதனை செய்தலின் சரியான வழிமுறை எது?

a)

S, R, Q, P

b)

P, S, R, Q

c)

Q, S, R, P

d)

S, R, P, Q

10.

பரிசோதனை முடிந்தப்பின், சோதனைக் குழாயைக் கழுவி சுத்தம் செய்தான். இதனை அடுத்து அவன் செய்ய வேண்டியது என்ன?

a)

அப்படியே வைத்து செல்ல வேண்டும்.

b)

அதனைப் பாதுகாப்பாக அடுக்கி வைக்க வேண்டும் .

c)

ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும்.

d)

வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

11.

பின்வருவனவற்றுள் எது மனித உடல் வளர்ச்சியைக் காட்டும் சரியான செயல்நிலை வரையரையல்ல?

a)

உயரம்

b)

உடல் எடை

c)

கைகளின் நீளம்

d)

உடலின் நிறம்

12.

மாதிரியை வரையும் போது எதனைக் கருத்தில் கொள்ள வேண்டும்?

a)

சிறியதாக மங்கலாக வரைதல்

b)

கற்பனை கலந்து வரைதல்

c)

தெளிவில்லாமல் வரைதல்

d)

தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் வரைதல்

13.

மாதிரியை வரைய என்ன பொருள் தேவைப்படும்?

a)

முகவை மற்றும் பிடிக்கால்

b)

எழுதுகோல் மற்றும் தாள்

c)

அளவை உருளை

d)

பாதுகாப்பு மூக்குக் கண்னாடி

14.

அட்டவணை 2, 4 வாரங்களில்ஒரு கோழியின் எடையைக் காட்டுகின்றது

கோழியின் எடையில் ஏற்பட்டுள்ள மற்றமைவு என்ன?

a)

குறைகிறது

b)

அதிகரிக்கிறது

c)

அதிகரித்துக் குறைகிறது

d)

குறைந்து அதிகரிக்கிறது

15.

அட்டவணை பனிக்கட்டியின் எண்ணிக்கையையும் அது கரைய எடுத்துக் கொண்ட நேரத்தையும் காட்டுகிறது.

18 பனிக்கட்டிகள் கரைய எடுத்துக் கொள்ளும் நேரத்தை முன் அனுமானம் செய்க.

a)

65

b)

95

c)

85

d)

75

16.

மாணவர்கள் அறிவியல் அறையினுள் நுழைவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?

a)

ஆசிரியர் அனுமதியைப் பெற வேண்டும்.

b)

பள்ளி சீருடையை அணிய வேண்டும்.

c)

கைகளைத் தூய்மையாகக் கழுவ வேண்டும்.

d)

கையுறை அணிய வேண்டும்

17.

பின்வருபவைகளுள் எது அறிவியல் அறை விதிமுறைகள் அல்ல?

a)

இரசாயன பொருள்களை நுகரக் கூடாது.

b)

நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டே ஆய்வு மேற்கொள்ளலாம்

c)

ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்திய பின் சுத்தம் செய்ய வேண்டும்.

d)

மேசை நாற்காலிகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.

18.

பின்வருவனவற்றுள் எது மாதிரிகளைச் சரியாக கையாளும் முறையை காட்டுகிறது?

a)
b)
c)
d)
19.

ஆய்வின் போது இரசாயன பொருளை நுகராமல் இருக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?

a)

பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும்.

b)

முகமுடி அணிய வேண்டும்.

c)

சுவாசக் கவசம் அணிய வேண்டும்.

d)

கையுறை அணிய வேண்டும்

20.

ஆய்வு மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

உடனே காயத்திற்குக் கட்டுப் போட வேண்டும்.

b)

உடனே ஆசிரியரிடன் தெரிவிக்க வேண்டும்.

c)

உடனே சக நண்பர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

d)

யாரிடமும் சொல்லாமல் இருக்க வேண்டும்.