NEW
Font size
Worksheetsஅறிவியல் கலைச் சொல் -3
Total questions: 20
Worksheet time: 3mins
கடிகாரத்தைப் பார்க்காமலேயே நீ எவ்வாறு நேரத்தைக் கணிக்கலாம்? (2004)
விண் மீன் குழுமம் அமைந்திருக்கும் திசையையும் இடத்தையும் உற்று நோக்குவதன் வழி
நிழலின் நீளத்தையும் திசையையும் உற்று நோக்குவதன் வழி
நிலாவின் இடத்தையும் அளவையும் உற்று நோக்குவதன் வழி
சுற்றுப் புறத்தின் வெளிச்ச அலவை உற்று நோக்குவதன் வழி
பின்வரும் தகவல், ஒரு தாவரத்தின் தன்மைகளைக் காட்டுகிறது.
* நீரைத் தேக்கி வைக்கும் ஆற்றலைக் கொண்ட தடித்த தண்டு * மிக நீண்ட வேர்கள் * சிறிய அளவிலான வேர்கள்
மேற்காணும் தன்மைகளின் அடிப்படையில், இத்தாவரம் வளர்வதற்குப் பொருத்தமான இடம் எது? (2006)
சதுப்பு நிலம்
ஏரி
பாலைவனம்
ஆற்றங்கரை
பின்வரும் தகவல், ஒரு விதையின் தன்மைகளைக் குறிகின்றது.
நான் சிறியதாகவும் இலேசாகவும் இருப்பேன். எனக்கு இறக்கைகளும் உண்டு. நான் தாய்ச் செடியிலிருந்து தூரப் பரவுவேன். நான் விழுந்ததும் முளைத்துக் கொள்வேன்
இந்த விதையின் பரவல் காரணி எது? (2006)
நீர்
காற்று
பிராணி
வெடித்துச் சிதறுதல்
பாதுகாத்தல் என்பதன் பொருள் என்ன? ( 2006)
பூமியில் வாழும் பல்வேறு இனவகைகள் முற்றழிகின்ற ஒரு நிலை
குறிப்பிட்ட அளவே உள்ள அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான ஒரு போராட்டம்
உயிரினங்கள் இயல்பாக வாழ்வதற்கான வாழிட நிலையை நிலை நாட்டுதல்
ஒன்றின் முற்றழிவைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் அசல் நிலைக்கு அதனைப் மேம்படுத்தி பராமரித்தல்
முற்றழிதல் என்பதன் பொருள் என்ன? (2006)
பூமியில் வாழும் பல்வேறு இனவகைகள் முற்றழிகின்ற ஒரு நிலை
குறிப்பிட்ட அளவே உள்ள அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான ஒரு போராட்டம்
உயிரினங்கள் இயல்பாக வாழ்வதற்கான வாழிட நிலையை நிலை நாட்டுதல்
ஒன்றின் முற்றழிவைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் அசல் நிலைக்கு அதனைப் மேம்படுத்தி பராமரித்தல்
போட்டி என்பதன் பொருள் என்ன? (2006)
பூமியில் வாழும் பல்வேறு இனவகைகள் முற்றழிகின்ற ஒரு நிலை
குறிப்பிட்ட அளவே உள்ள அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான ஒரு போராட்டம்
உயிரினங்கள் இயல்பாக வாழ்வதற்கான வாழிட நிலையை நிலை நாட்டுதல்
ஒன்றின் முற்றழிவைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் அசல் நிலைக்கு அதனைப் மேம்படுத்தி பராமரித்தல்
புணரமைத்தல் என்பதன் பொருள் என்ன? (2006)
பூமியில் வாழும் பல்வேறு இனவகைகள் முற்றழிகின்ற ஒரு நிலை
குறிப்பிட்ட அளவே உள்ள அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கான ஒரு போராட்டம்
உயிரினங்கள் இயல்பாக வாழ்வதற்கான வாழிட நிலையை நிலை நாட்டுதல்
ஒன்றின் முற்றழிவைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் அசல் நிலைக்கு அதனைப் மேம்படுத்தி பராமரித்தல்
ஒளி விலகல் என்பதன் பொருள் என்ன? ( 2006)
ஒளி எல்லாத் திசைகளிலும் செல்லுதல்
ஒளி நேர்க்கோட்டில் செல்லுதல்
ஒளி ஒரு பொருளிலிருந்து நம் கண்ணை நோக்கிச் செல்லுதல்
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லுதல்
படம் X செயற்பாங்கின் தன்மைகளைக் காட்டுகிறது. X செயற்பாங்கு என்பது என்ன? (2006)
உருகுதல்
கொதித்தல்
உலர்தல்
ஆவியாகுதல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் தன்மைகளுள் எது மழை ஆடை தயாரிப்புக்கு மிகப் பொருத்தமானது? ( 2006)
இலேசானதும் நீர் புகாததும்
எளிதில் நெகிழக் கூடியதும் மிருதுவானதும்
மட்கிப் போக முடியாததும் நெடுநாள் தாங்கக் கூடியதும்
மறு உருவாக்கமும் மறு பயனீடு செய்யக்கூடியதும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் தன்மைகளுள் எது இரப்பர் வளைய தயாரிப்புக்கு மிகப் பொருத்தமானது? ( 2006)
இலேசானதும் நீர் புகாததும்
எளிதில் நெகிழக் கூடியதும் மிருதுவானதும்
மட்கிப் போக முடியாததும் நெடுநாள் தாங்கக் கூடியதும்
மறு உருவாக்கமும் மறு பயனீடு செய்யக்கூடியதும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் தன்மைகளுள் எதனை பயன்படுத்தினால் தூய்மைக் கேட்டினையும் மூலப் பொருள் கட்டுபாட்டையும் ஊக்குவிக்கின்றது? ( 2006)
இலேசானதும் நீர் புகாததும்
எளிதில் நெகிழக் கூடியதும் மிருதுவானதும்
மட்கிப் போக முடியாததும் நெடுநாள் தாங்கக் கூடியதும்
மறு உருவாக்கமும் மறு பயனீடு செய்யக்கூடியதும்
இந்நடவடிக்கைகளின் வழி அறியப்படுவது என்ன ? ( 2005)
போராட்டம்
பாதுகாத்தல்
பேணுகை
இனவகை நீடுநிலவல்
X பொருள் ஓர் ஒளி ஊடுருவி ஆகும்.
பின்வருவனவற்றுள் எது X பொருளை விவரிக்கின்றது? ( 2005)
அது தன்னுள் ஒளியை ஊடுருவச் செய்யாது
அது தன்னுள் சிறிதளவு ஒளியை மட்டுமே ஊடுருவச் செய்யும்
அது தன்னுள் எல்லா ஒளியையும் ஊடுருவச் செய்யும்
அது தன்னுள் மிகபிரகாசமான ஒளியை மட்டுமே ஊடுருவச் செய்யும்?
Y பொருள் ஒரு குறையொளி ஊடுருவி பொருள் ஆகும்.
பின்வருவனவற்றுள் எது Y பொருளை விவரிக்கின்றது? ( 2005)
அது தன்னுள் ஒளியை ஊடுருவச் செய்யாது
அது தன்னுள் சிறிதளவு ஒளியை மட்டுமே ஊடுருவச் செய்யும்
அது தன்னுள் எல்லா ஒளியையும் ஊடுருவச் செய்யும்
அது தன்னுள் மிகபிரகாசமான ஒளியை மட்டுமே ஊடுருவச் செய்யும்?
W பொருள் ஓர் ஒளி புகாப் பொருள் ஆகும்.
பின்வருவனவற்றுள் எது W பொருளை விவரிக்கின்றது? ( 2005)
அது தன்னுள் ஒளியை ஊடுருவச் செய்யாது
அது தன்னுள் சிறிதளவு ஒளியை மட்டுமே ஊடுருவச் செய்யும்
அது தன்னுள் எல்லா ஒளியையும் ஊடுருவச் செய்யும்
அது தன்னுள் மிகபிரகாசமான ஒளியை மட்டுமே ஊடுருவச் செய்யும்?
இப்படம் ஓர் ஆராய்வைக் காட்டுகின்றது?
இந்த ஆராய்வின் வழி உறுதிபடுத்தப்படுவது எது? ( 2005)
ஒளி விளகிச் செல்கிரது
ஒளி பிரதிபலிக்கின்றது
ஒளி சிதறுகின்றது
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கின்றது
படம் ஓர் ஆராய்வைக் காட்டுகின்றது.
இந்த ஆராய்வு எதனை நிரூபிக்கின்ரது? ( 2006)
I.ஒளி நேர்க்கோட்டில் செல்கிறது
II. ஒளி விலகல்
III. ஒளிபுகாப் பொருளில் ஒளி ஊடுருவாது
IV. ஒளி பிரதிபலித்தல்
I, II
I, III
II, IV
III, IV
படம், மாற்றியமைக்கக்கூடிய ஒரு சன்னலைக் காட்டுகிரது.
சன்னலை மூடுவதற்குச் சிரமமாக இருக்கிறது. சன்னல் பிடியில் என்ன செய்யப்பட வேண்டும்?
சாயம் பூசுதல்
எண்ணெய் இடுதல்
நீரைக் கொண்டு கழுவுதல்
மனல் தாளைக் கொண்டு தேய்த்தல்
படம், ஒரு வாரத்திற்கு விடப்பட்டிருந்த ஒரு ரொட்டித்துண்டைக் காட்டுகின்றது.
அந்த ரொட்டித் துண்டில் பூஞ்சணம் வளர்ந்திருந்தது. ரொட்டித் துண்டில் பூஞ்சணம் வளர எது காரணமாகின்றது?
வெப்பம் மற்றும் உலர்ந்த சூழல்
குளிர்ச்சி மற்றும் உலர்ந்த சூழல்
வெப்பம் மற்றும் ஈரமான சூழல்
குளிர்ச்சி மற்றும் ஈரமான சூழல்