Worksheetsஅறிவியல் ஆண்டு 5: இரசாயனத் தன்மைகள் (ஆக்கம்- மு.இரத்தினவேல்)
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்க்காண்பனவற்றுள் எது இரசாயனத்தன்மையைப் பற்றி தவறான கூற்று?
pH அளவையில் 0 - 14 வரையில் மதிப்பு எண்கள் உள்ளன.
பொருள்களின் இரசாயனத்தன்மை அறிய லிட்மஸ் தாளைப் பயன்படுத்தலாம்.
ஆரஞ்சுச் சாற்றில் விடப்பட்ட நீலப் பூஞ்சுத்தாள் நிறம் மாறாது.
pH மதிப்பு சுழியத்தை நெருங்கினால் காடித்தன்மை மிக அதிகமாகும்.
படத்தில் காணும் பொருட்களைப் பற்றி எது தவறான கூற்று?
அவை காடித்தன்மை கொண்டவை.
அவை கசப்பானவை.
அவை புளிக்கும்.
அவை 0 தொடங்கி 7 க்குள் (< 7) pH மதிப்பைக் காட்டும்.
கீழ்க்காணும் கருவிகளில் எது pH மதிப்பை மிக துள்ளியமாக அளக்கும்?
A,B,C ஆகியவற்றிற்குப் பொருத்தமான பொருள்கள் யாவை?
A-அன்னாசிச் சாறு,
B-சவர்க்காரத் தூள்,
C-பால்
A-அன்னாசிச் சாறு,
B-ஆரஞ்சு சாறு,
C-எண்ணெய்
A-பற்பசை,
B-சவர்க்காரத் தூள்,
C-எண்ணெய்
A-அன்னாசிச் சாறு,
B-வழலை,
C-பால்
- இனிப்பான பொருள்
- சிவப்பு நிற பூஞ்சுத்தாளும் நீல நிற பூஞ்சுத்தாளிலும் நிறமாற்றமில்லை
மேற்காணும் தன்மைகளுக்குப் பொருத்தமான பொருள் எது?
சீனி கரைசல்
அன்னாசிச் சாறு
ஏப்பல் சாறு
வழலை திரவம்
இப்பொருட்களுடன் தொடர்புடைய பொருத்தமான கூற்று என்ன?
pH மதிப்பு சுழியம் தொடங்கி 7 (<7) க்குள் இருக்கும்.
சிவப்பு நிற பூஞ்சுத்தாள் நீலமாக மாறும்.
சிவப்பு மற்றும் நீல நிற பூஞ்சுத்தாளில் நிற மாற்றம் இல்லை.
கசப்புத் தன்மை கொண்டிருக்கும்.
அமினா லிட்மஸ் தாள்களைக் கொண்டு வேப்பிலையை ஆராய்ந்தாள். நீலம் மற்றும் சிவப்பு நிற லிட்மஸ் தாள்களில் எந்தவித நிறமாற்றமும் இல்லை. அவளின் முன்னறிவின் படி வேப்பிலை காரத்தன்மை கொண்டது. ஏன் அவளது ஆராய்வு சரியான முடிவைக் காட்டவில்லை?
அவள் வேறு இலையைப் பயன்படுத்தி இருப்பாள்.
லிட்மஸ் தாள் காலாவதியாகி இருக்கலாம்.
அவள் வேப்பிலையை அரைத்து சாற்றை ஆராய வேண்டும்.
அவள் இலக்கியல் pH மீட்டரைப் பயன்படுத்தி இருக்க வேண்டும்.
படத்தில் காணும் சாறு சிவப்பு நிற லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுகிறது. அதன் சுவை என்னவாக இருக்கும்?
இனிப்பு
கரிப்பு
புளிப்பு
கசப்பு
காப்பி மற்றும் பாகற்காயின் தன்மைகள் யாவை?
அவை சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்.
அவை நீல நிற லிட்மஸ் தாளைச் சிவப்பாக மாற்றும்.
அவை இனிப்பாக இருக்கும்.
அவை கசப்பாக இருக்கும்.
அம்மா சமைக்கும் போது புளி தீர்ந்து போனது. அம்மா புளிக்குப் பதிலாக எப்பொருளைப் பயன்படுத்தலாம்?
அரைத்த மிளகாய்
ஆப்பிள் பழம்
உருளைக் கிழங்கு
தக்காளிச் சாறு
சில காடி, காரப் பொருட்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஏன்?
அவை கண் கவர் வண்ணத்தில் இருக்கும்.
அவை சிதைக்கும் (corrosive) தன்மை கொண்டவை.
அவை அதிக புளிப்பாக இருக்கும்.
அவை லிட்மஸ் தாளை எரித்து விடும்.
படத்தில் உள்ள பொருட்களின் இரசாயனத் தன்மையோடு ஒத்த பொருள் யாது?
கீழ்க்காணும் பொருட்களில் எது நடுமைத் தன்மை கொண்டது அல்ல?
முத்து தகவல் தெரியாத ஒரு வேதியியல் பொருளின் இரசாயனத்தன்மையை ஆராய எண்ணினான். அவனிடம் லிட்மஸ் தாள் இல்லை. அவன் மேற்கொள்ளும் எளிய, சிறந்த வழி யாது?
சுவைத்துப் பார்க்கலாம்.
ஊதா நிற முட்டைகோஸைப் பயன்படுத்தி லிட்மஸ் தாளை உருவாக்கலாம்.
அப்பொருளைத் தொட்டுப் பார்க்கலாம்.
அப்பொருளை காடி அல்லது காரத்துடன் கலந்து நடக்கும் மாற்றத்தைக் கொண்டு அனுமானிக்கலாம்.
ஒரே மாதிரியான இரசாயனத்தன்மைகள் கொண்ட இணையைத் தெரிவு செய்க.
ஆப்பிள் சாறு, புளிக்காடி, வழலை நீர்
சவர்க்காரத் தூள், வேப்பிலை, அன்னாசிச் சாறு
உப்புக் கரைசல், சீனிக் கரைசல், நீர்
எண்ணெய், புளிச்சாறு, சமையல் சோடா
ஆனந்தன் முட்டையின் வெள்ளைப் பகுதியின் pH-ஐக் கண்டறிய ஆய்வினை மேற்கொண்டான். முட்டையின் pH மதிப்பு 9.0 என அவன் கண்டறிந்தான். இதிலிருந்து நாம் என்ன அறிந்து கொள்ள முடிகிறது?
முட்டையின் வெள்ளைப் பகுதி காடித்தன்மை கொண்டது.
முட்டையின் வெள்ளைப் பகுதி காரத்தன்மை கொண்டது.
முட்டையின் வெள்ளைப் பகுதி நடுமைத்தன்மை கொண்டது.
முட்டையின் வெள்ளைப் பகுதி புளிக்கும்.
அம்மா வாங்கிய பால் காலாவதி அடைந்து 2 மாதங்கள் ஆயின. இப்பொழுது அப்பாலின் pH மதிப்பு என்னவாக இருக்கும்?
9.0
14
7.0
6.0
படத்தில் காணும் பொருட்களில் எவை ஈரமான சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றும்?
P
Q
R
S
நடுமைத் தன்மை கொண்ட பொருட்கள்....
நீல பூஞ்சுத்தாளைச் சிவப்பாக மாற்றும்.
சிவப்பு பூஞ்சுத்தாளை நீலமாக மாற்றும்.
சிவப்பு பூஞ்சுத்தாளை ஊதாவாக மாற்றும்.
நீலம் மற்றும் சிவப்பு நிற லிட்மஸ் தாள் நிறம் மாறாது.
சுத்தமான நீரின் pH மதிப்பு என்ன?
0.7
4.0
7.0
13.0
