wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

'கோவிட் 19' பள்ளி விடுமுறை பயிற்சி

Total questions: 26

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

x-முட்டையிடுதலும், Y- குட்டி போடுதலாகும்.


சரியானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

X-கோழி Y -வெளவால்

b)

X-ஆடு Y-புலி

c)

X-எருமை Y-வாத்து

d)

X-இறால் Y-மீன்

2.

இவ்விலங்கு ஏன் 'ஈருலக விலங்கு' என்கின்றனர்.

a)

சுவாசத்துளையின் வழி சுவாசிக்கிறது.

b)

செவுளின் வழி சுவாசிக்கிறது.

c)

நிலத்தில் வாழும் போது நுரையீரலாலும் நீரில் வாழும் போது தோலாலும் சுவாசிக்கிறது.

d)

நிலத்தில் வாழும் போது தோலாலும் நீரில் வாழும் போது நுரையீரலாலும் சுவாசிக்கிறது.

3.

கிளிக்குக் கூரிய _____________________ உள்ளன.

a)

வால்

b)

நகங்கள்

c)

கால்கள்

4.

கீழ்க்கண்ட பட்டியலில் எது தவறானது?

a)

ஓடு- நத்தை, ஆமை

b)

கொம்பு - மான், ஆடு

c)

இறகு- வாத்து, குருவி

d)

உரோமம்- முயல்,பாம்பு

5.

நிலத்தில் வாழும் விலங்குகளைத் தெரிவு செய்க.

a)

குதிரை, மீன்

b)

பசு, யானை

c)

நண்டு, இறால்

d)

தவளை, சுறா

6.

ஈருலக வாழி என்று எந்த விலங்கை அழைப்பர்?

a)

பூனை

b)

திமிங்கலம்

c)

தவளை

d)

மீன்

7.

----------------- ஒரு நாளில் 1500 முட்டைகள் இடும்.

a)

முதலை

b)

தேனீ

c)

கோழி

d)

பாம்பு

8.

------------------------ ஆகியவற்றுக்கு மிக உறுதியான அலகுகள் அமைந்துள்ளன.

a)

புறா, கிளி

b)

கழுகு, கிளி

c)

கிளி, சிட்டுக்குறுவி

9.

ஆடு ----------------

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

10.

மாமிச உண்ணியின் பற்கள் ---------------------- இருக்கும். இறைச்சியை நன்றாகக் கிழித்துத் திண்ண முடிகிறது.

a)

தட்டையாக

b)

அகன்று

c)

கூர்மையாக

11.

ஒருவருக்கு மொத்தம் _____________ நிரந்தர பற்கள் இருக்கும்.

a)

16

b)

28

c)

34

d)

32

12.

வாழை மரத்தின் இலைகள் ______________ அமைப்பைக் கொண்டவை.

a)

நேர்க்கோடு

b)

வரிசை

c)

கிளைப்பின்னல்

13.

இவற்றில் எது தாவரத்தினால் மனிதன் அடையும் பயன் அல்ல?

a)

தாவரம் மனிதனுக்கு உணவை அளிக்கிறது.

b)

தாவரம் மனிதனுக்கு நீரை கொடுக்கிறது.

c)

தாவரம் மனிதனுக்குச் சுத்தமான காற்றைக் கொடுக்கிறது.

14.

கருப்பு நிறத்தில் இருக்கும். நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.


அது என்ன?

a)

மணல்

b)

தோட்ட மண்

c)

களிமன்

15.

இவற்றில் எந்தப் பொருள் அதிகமாக நீரை உறிஞ்சும்?

a)

பருத்தித்துணி

b)

கைக்குட்டை

c)

துவாலை

16.

எந்தப் பொருள் நீர் உறிஞ்சாத பொருளால் செய்யப்பட்டுள்ளது?

a)

போர்வை

b)

குடை

c)

சட்டை

17.

உணவை மென்று திண்ண உதவும் பற்கள் யாவை?

a)

வெட்டுப்பற்கள்

b)

கடைவாய்ப்பற்கள்

c)

கோரைப்பற்கள்

18.

நாம் குளிர்ச்சியான உணவை உண்ணும்போது பற்கள் கூசுகின்றன. பல்லின் எந்தப் பகுதி இந்த உணர்வினை நமக்கு உணர்த்தும்?

a)

தாடை எலும்பு

b)

ஈறு

c)

உமிழ்நீர்

19.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

உற்றறிதல்

b)

செயல்படுதல்

c)

ஊகித்தல்

d)

அனுமானித்தல்

20.

எந்தத் தாவரம் விதையின் மூலம் இனவிருத்தி செய்யாது?

a)

பப்பாளி

b)

நொய்வ மரம்

c)

மாமரம்

d)

மருவிளம்பட்டை

21.

நமது பற்களின் மேற்பகுதியை ஒருவிதமான உறுதியான பளபளப்பான பற்பூச்சு கவசம்போல் பாதுகாக்கிறது.

மேற்கண்ட கூற்றுக்குப் பொருத்தமான விடை என்ன?

a)

பற்சிப்பி

b)

பற்கூழ்

c)

ஈறு

d)

தந்தினி

22.

எல்லா விலங்குகளும் இறைச்சியை மட்டுமே உண்டால் என்ன நிகழும் என்பதை முன் அனுமானம் செய்க.

a)

விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

b)

அனைத்துண்ணி விலங்குகள் அதிகமாக இருக்கும்.

c)

உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

d)

தாவர உண்ணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

23.

காந்தத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வட்டக் காந்தத்திற்கு 10 துருவங்கள் உண்டு.

b)

காந்தத்தின் ஒரே மாதிரியான துருவங்கள் ஈர்க்கப்படுகின்றன

c)

U – வடிவ காந்தத்திற்கு துருவம் இல்லை.

d)

காந்தத்திற்கு 2 துருவங்கள் உண்டு.

24.

சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கோள் எது?

a)

சனி

b)

பூமி

c)

வியாழன்

d)

நிருதி

25.

ஏன் நிலாவும் சூரியனும் பூமியிலிருந்து காணும்போது ஒரே அளவில் தென்படுகின்றன ?

a)

இரண்டும் ஒரே அளவில் இருக்கின்றன.

b)

சூரியன் நிலவை விட தூரத்தில் உள்ளது.

c)

நிலவு சூரியனை விட அளவில் பெரியது.

26.

ஏன் புவியில் மட்டும் மனிதர்கள் வாழ்கின்றனர் ?

a)

புவியில் நிறைய மரங்களும் விலங்குகளும் உள்ளன.

b)

புவியில் ஏதுவான காற்று மண்டலம் உள்ளது.

c)

புவியில் ஏதுவான வெப்ப நிலையும் காற்றும் உள்ளது.