NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர்ப்போட்டி
Total questions: 25
Worksheet time: 13mins
மனிதன் சுவாசிக்கும்போது மூக்கு, மூச்சுக்குழாய் மற்றும் _________ ஆகியவற்றைப் பயன்படுத்துகிறான்.
வாய்
நுரையீரல்
நாக்கு
கழுத்து
இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலைவிட _____________.
பெரியது
சமமானது
சிறியது
எளிமையானது
மனிதன் சுவாசிக்கும்போது ____________ உள்ளிழுத்து _______________ வெளியிடுகின்றான்.
கரிவளி, உயிர்வளி
கரிவளி, கரிவளி
உயிர்வளி, உயிர்வளி
உயிர்வளி, கரிவளி
நுரையீரல் உள்ளே சென்ற உயிர்வளி ___________ செல்கிறது.
மூளைக்குச்
இரத்தநாளத்திற்குச்
கண்களுக்குச்
வயிற்றுக்குச்
மூச்சை உள்ளே இழுக்கும்போது நெஞ்சுப் பகுதி __________________.
சுருங்குகிறது
விரிவடைகிறது
அதிகமடைகிறது
குறைவடைகிறது
ஒரு நிமிட நெஞ்சு அசைவின் மூலம் நாம் நமது ____________________ அறியலாம்.
மூச்சுக்காற்றை
நெஞ்சு அசைவை
சுவாச வீதத்தை
இரத்த ஓட்டத்தை
மூச்சை வெளியே விடும்போது நெஞ்சுப் பகுதி ______________.
விரிவடைகிறது
அதிகமாகிறது
சுருங்குகிறது
குறைகிறது
ஒருவர் ஓய்வெடுக்கும் போது நிமிடத்திற்கு ஏறக்குறைய _______ முறை சுவாசிக்கிறார்.
35
20
45
60
நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விரைவுத் தன்மை அல்லது மாறுபடுகிறது ___________ ஏற்ப நமது சுவாசத்தின் வீதம் மாறுபடுகிறது.
கடினத்தன்மை
இலகுத்தன்மை
இயற்கைத் தன்மை
வேகத்தன்மை
உடலுக்குத் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுவதைக் ______________ என்போம்.
மலங்கழித்தல்
கழிவகற்றுதல்
சுவாசித்தல்
துலங்குதல்
நம் உடலிலிருந்து கரிவளி, நீராவி, ____________ மற்றும் ______________ ஆகியவை கழிவுகளாக வெளியேற்றப்படுகின்றன.
வியர்வை, சிறுநீர்
இரத்தம், வியர்வை
மூச்சு, வியர்வை
மலம், காற்று
கழிவுகள் வெளியேறாவிட்டால் ______________ மாறி நோயை உண்டாக்கும்
உணவாக
இனிப்பாக
நச்சாக
மூச்சாக
கழிவுகளை அகற்றும் உறுப்புகள்:
மூக்கு, தோல் , சிறுநீரகம்
மூக்கு, நுரையீரல், தோல்
தோல், நுரையீரல், சிறுநீரகம்
மூச்சுக்குழாய், சிறுநீரகம், தோல்
________________ கரிவளியையும் நீராவியும் வெளியேற்றுகின்றது.
நுரையீரல்
மூக்கு
சிறுநீரகம்
தோல்
நாம் ஒரு நாளைக்கு _______ குவளை நீர் அருந்த வேண்டும்.
3
4
7
8
___________ வியர்வைச் சுரப்பியில் உள்ள வியர்வையை வெளியேற்றுகின்றது.
சிறுநீரகம்
நுரையீரல்
தோல்
கழுத்து
செரிமானம் ஆகாத உணவு மலமாக ஆசனவாய் வழியாக வெளியேறுகின்றது. இதையே _____________ என்கிறோம்.
சுவாசித்தல்
மலம் கழித்தல்
கழிவகற்றல்
தூண்டலுக்குத் துலங்குதல்
மனிதன் ______________ துலங்குகிறான்.
தூண்டலுக்கேற்பத்
சுவாசத்திற்கேற்பத்
இயற்கைக்கேற்பத்
சிந்தனைக்கேற்பத்
மனிதனின் ______________ தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.
ஐம்புலன்கள்
சிந்தனைகள்
உறுப்புகள்
ஐம்பொறிகள்
மனிதன் தூண்டலுக்கேற்பத் துலங்குவதன் அவசியம் என்ன?
ஆபத்திலிருந்து பாதுகாக்க
படிப்பதற்கு
ஆடுவதற்கு
ஆபத்தை உருவாக்க
தூண்டலுக்குத் தடையாகும் பழக்கவழக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்றைத்தவிர.
மது அருந்துதல்
சமச்சீர் உணவு உண்ணுதல்
போதைப்பொருள் உட்கொள்ளுதல்
பசை நுகர்தல்
கீழ்காண்பவற்றில் எது விலங்குகளின் சுவாச உறுப்பு அல்ல?
நுரையீரல்
செவுள்
சுவாசத் துளை
தோல்
ஒன்றுக்கு மேற்பட்ட சுவாச உறுப்புகளைக் கொண்ட விலங்குகளை ____________ அழைப்போம்.
பெரிய உயிரினங்கள்
ஈருலக உயிரினங்கள்
சிறிய உயிரினங்கள்
அதிசய உயிரினங்கள்
கீழ்க்காண்பவற்றில் உள்ள விலங்குகள் இரு சுவாச உறுப்புகளைக் கொண்டவை. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
தவளை
சாலமண்டர்
நியூட்
சிசிலியா
மேலே உள்ள அனைத்தும்
__________ இனத்திற்கு முதுகெலும்பு இல்லை.
பூச்சி
பறவை
மீன்
பாலூட்டி
