NEW
Font size
Worksheetsஅறிவியல் புதிர்
Total questions: 20
Worksheet time: 40mins
நிழல் எவ்வாறு உருவாகிறது?
ஒளி, ஒளிபுகும் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளைக் கடக்கும் பொழுது
ஒளியை, ஒளிபுகாப் பொருள் தடை செய்யும் பொழுது
ஒளி, ஒளிபுகாப் பொருளில் வளைந்து செல்லும் பொழுது
பின்வருவனவற்றுள் எந்தப் பொருள் நிழலை உருவாக்கும்?
தெளிவான கண்ணாடி
நெகிழிக் குவளை
பாத்திரத்திலுள்ள நீர்
ஆடிக் குவளை
பின்வரும் தாவரங்களில் மணலில் பயிரிட ஏற்ற தாவரம் எது?
கள்ளிச்செடி
கரும்பு செடி
சோளச் செடி
தாமரை
கீழ்க்காண்பவைகளில் எது சூரிய குடும்ப உறுப்பினர் அல்ல?
நட்சத்திரம்
சூரியன்
விண்கற்கள்
எரிகல்
பின்வரும் கூற்றுகளில் எது சரி?
நிலவு பூமியைவிட 400 மடங்கு பெரியது.
சூரியன் நிலவைவிட 4 மடங்கு பெரியது
பூமி நிலவை விட 4 மடங்கு பெரியது
சூரியன் பூமியை விட 400 மடங்கு பெரியது
பின்வருவனவற்றுள் எது சூரியனுக்குத் தொலைவிலிருந்து அருகிலான கோள்களின் வரிசையைக் காட்டுகிறது?
புதன், செவ்வாய், நிருதி
வியாழன், சனி, புதன்
வருணன், சனி, செவ்வாய்
புதன், வெள்ளி, பூமி
வான் போக்குவரத்தின் வளர்ச்சியினால் ஏற்படும் நன்மை என்ன?
பொருள் செலவைக் குறைக்கலாம்
பயணச் சீட்டு மலிவாகக் கிடைக்கும்
எரிபொருள் விரயத்தைத் தவிர்க்கலாம்
பயண நேரத்தைக் குறைக்கலாம்
பின்வரும் எந்தப் பொருள் ஒளி பிரதிபலிப்பின் கோட்பாட்டில் இயங்குகின்றது?
மூக்குக்கண்ணாடி
பல்வண்ணக் காட்சிக் கருவி
உருப்பெருக்காடி
தொலைநோக்காடி
பின்வரும் கூற்றுகளில் புதுப்பிக்க இயலாத சக்தியை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
மீளாக்கம் செய்ய முடியாது
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது
தொடர்ச்சியாக்க் கிடைக்கக் கூடிய சக்தி
மீளாக்கம் செய்யக்கூடிய சக்தி
மின்கம்பிகள் தளர்வாகக் கட்டப்படுவதன் காரணமென்ன?
மின்கம்பிகள் வெயில் காலத்தில் விரிவடைவதற்கு
குளிர்காலத்தில் சுருங்கி அறுந்து விடாமல் இருக்க
வெயில் காலத்தில் இறுக்கமாவதைத் தவிர்க்க
மின்சாரத்தைச் சிக்கனப்படுத்த
பின்வருவனவற்றுள் எது துருப்பிடித்தலின் விளைவு அல்ல?
பணவிரயம் ஏற்படும்
பொருள்களின் ஆயுட்காலம் நீடிக்கும்
பொருள்கள் தேய்மானம் அடையும்
பொருள்களின் உறுதித்தன்மை குறையும்
பின்வரும் பொருள்களில் காரத்தன்மையைக் கொண்ட பொருள் எது?
புளிக்காடி
சீனி கரைசல்
சவர்க்கார நீர்
ஆரஞ்சு சாறு
மழையின் காரணமாக துர்க்காவின் காலணி உலரவில்லை. பின்வரும் எச்சூழலில் அக்காலணியை விரைவில் உலர வைக்கமுடியும்?
காலணியை அடுப்பின் மீது வைக்க வேண்டும்
காலணியைக் குளிரூட்டி பொருத்தப்பட்ட அறையில் வைக்க வேண்டும்
காலணியை இஸ்திரி செய்ய வேண்டும்
காலணியைச் சுழலும் காற்றாடியின் கீழ் வைக்க வேண்டும்
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
எறும்பு
புலி
சிங்கம்
கழுதைப்புலி
கீழ்க்காணும் விலங்குகளில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு எது?
மலைப்பாம்பு
ஓராங் ஊத்தான்
சிங்கம்
முதலை
நுண்ணுயிர்களில் மிகச் சிறியது எது?
குச்சியம்
பூஞ்சணம்
அல்கா
நச்சியம்
கீழ்க்காண்பனவற்றுள் எது நுண்ணுயிர்களின் செயற்பாங்கு அல்ல?
ஓடுதல்
நகர்தல்
சுவாசித்தல்
வளர்தல்
பின்வருபவை தொற்றுநோய் பரவலின் காரணிகள் ஆகும். ஒன்றைத் தவிர.
தொடுதல்
காற்று
விலங்கு
பேசுதல்
அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட பொருள்களில் எது மிக விரைவில் கெட்டுப்போகும் உணவாகும்?
அரிசி
நெத்திலி
வாட்டிய ரொட்டி
மீன்
பின்வருவனவற்றுள் உராய்வின் தீமை எது?
வெப்பத்தை உண்டாக்கும்
கத்தியைக் கூர்மையாக்கும்
எழுதுவதற்கு
வாகனத்தை நிறுத்தும்
