wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சரியான ரகர,றகர சொற்களை அடையாளம் காண்க.

a)

குளக்கறை

b)

வாழைக்கறை

c)

கீறை

d)

வரிசை

2.

உயிர் குறில் எழுத்துகள் யாவை?

a)

அ,ஆ,இ,ஈ,உ

b)

அ,இ,உ,எ,ஒ

c)

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ

d)

அ,ஈ,ஊ,ஓ,ஒள

3.

உயிர் குறில் எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

7

c)

12

d)

18

4.

சரியான கூற்றை தேர்ந்தெடு.

a)

உயிர் எழுத்துகள் -12

b)

மெய் எழுத்துகள் - 216

c)

ஆய்த எழுத்து - 1

d)

உயிர்மெய் எழுத்துகள் -18

5.

சரியான பால் வகையைத் தெரிவு செய்க.

a)

மாணவி - பெண்பால்

b)

மாடுகள் - பலர்பால்

c)

குரங்கு - பலவின்பால்

d)

ஆசிரியர்கள் -ஒன்றன்பால்

6.

மலர் + வளையம் = மலர்வளையம்

எவ்வகை புணர்ச்சியைச் சார்ந்தது

a)

விகாரப் புணர்ச்சி

b)

இயல்பு புணர்ச்சி

7.

தவறாக வலிமிகுந்துள்ள சொல் எது?

a)

இசையைக் கற்றாள்

b)

கண்க்காட்சி

c)

அத்தலைவன்

d)

அந்தக் குடம்

8.

நீங்கள் கூறியதில் நியாயம் இருக்கிறது. ............., நான் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

a)

ஆகவே

b)

ஆகையால்

c)

எனவே

d)

ஏனென்றால்

9.

அமுதா! இங்கே வா.

எந்த வேற்றுமை உருபைக் கொண்டுள்ளது?

a)

முதலாம் வேற்றுமை

b)

ஆறாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

எட்டாம் வேற்றுமை

10.

ஜீவா அலுவலகத்தில் பணி புரிகிறார்.

வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு.

a)

ஆறாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

11.

இராமு தன் நண்பனின் புத்தகத்தைக் கிழித்து விட்டான். அதனால் மனம் வருந்தினான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

c)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

d)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

12.

பழமொழிகளைத் தேர்ந்தெடு

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

d)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

13.

அரைப்புள்ளி

a)

!

b)

?

c)

;

d)

:

14.

சரியான நிறுத்தக்குறியை இடுக.

மாணவர்கள் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றனர் ...... வரிசையாக உணவுகளை வாங்கினர்.

a)

:

b)

.

c)

;

d)

?

15.

சரியான லகர,ழகர,ளகர எழுத்துகள் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடு.

a)

நீர்வாலி

b)

கிளியின் அலகு

c)

வெள்ளை நிறம்

d)

மீன் குலம்

e)

தக்காலிச் செடி

16.

சரியான பொருளை அறிக.

அலகு

a)

எழில்

b)

பறவையின் மூக்கு

c)

சிறப்பு

17.

கண்ணன் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் பாழடைந்த மண்டபத்தைக் கண்டான்.


வாக்கியத்தின் செயப்படுபொருளைத் தேர்ந்தெடு.

a)

கண்ணன்

b)

பாழடைந்த மண்டபத்தை

c)

செல்லும் வழியில்

d)

கண்டான்

18.

தொழிற்பெயரை அடையாளம் காண்க.

a)

மருத்துவர்

b)

குயவன்

c)

ஏற்றுமதி

d)

நூலகம்

19.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

20.

மண் + குடம் = மட்குடம்


எவ்வகை விகாரத்தைச் சார்ந்தது?

a)

திரிதல்

b)

தோன்றல்

c)

கெடுதல்