wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக் கிளவி (ஆசிரியர் மோகன்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

திருமண மண்டபத்தில் _________வென ஓடி, திருமண வேலைகளைக் கவனித்தார் அமுதன்.

a)

மளமள

b)

குடுகுடு

c)

தரதர

2.

திருடும்போது கையும் களவுமாகப் பிடிபட்ட ஆடவர் ____________வென விழித்தான்.

a)

கலகல

b)

சிடுசிடு

c)

திருதிரு

3.

பிடிபட்ட அத்திருடனை காவல் அதிகாரி ______________வெனக் காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றார்.

a)

சரசர

b)

தரதர

c)

குடுகுடு

4.

இளைய கலைவாணரின் நகைச்சுவையைக் கேட்டு வேலன் __________வெனச் சிரித்தான்.

a)

கலகல

b)

மடமட

c)

கடுகடு

5.

டென் வீட்டின் பின்புறம் இருக்கும் ஆற்றில் நீர் _____________வென ஓடியது.

a)

சரசர

b)

சலசல

c)

தகதக

6.

மாலா தன் வீட்டு வேலைகளை __________வென முடித்துக் கொண்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்தாள்.

a)

கிலுகிலு

b)

மினுமினு

c)

மளமள

7.

காலைக் கதிரவனின் ஒளிபட்டு, கடல்நீர் _____________வெனக் காட்சியளித்தது.

a)

தகதக

b)

மடமட

c)

மினுமினு

8.

இராமன் மீது கோபம் கொண்ட இராவணன், தன் பற்களை ___________வெனக் கடித்துக் கொண்டே போருக்குத் தயாரானான்.

a)

சரசர

b)

நறநற

c)

சிடுசிடு

9.

வாசு கோபத்தின் காரணமாகக் காலையிலிருந்து அனைவரிடமும் ______________வெனப் பேசினார்.

a)

சிடுசிடு

b)

கலகல

c)

கடுகடு

10.

தாயார் வாங்கி வந்த வெள்ளிப்பாத்திரங்கள் __________வென மின்னின.

a)

மினுமினு

b)

பளபள

c)

பளீர்பளீர்

11.

காய்ந்த இலைகளின் ஊடே பாம்பு ஊர்ந்து செல்லும் போது ___________வென்று ஓசை கேட்டது.

a)

நறநற

b)

மடமட

c)

சரசர

12.

தன் அறைக்கதவை யாரோ _________வென்று தட்டும் ஓசை கேட்டு மலர்விழி திடுக்கிட்டாள்.

a)

மடமட

b)

மளமள

c)

தடதட

13.

அக்கட்டடம் சில நொடிகளுள் __________வென இடிந்து விழுந்தது.

a)

தடதட

b)

மடமட

c)

சிடுசிடு

14.

எதிர்த்துப் பேசிய மகனைப் ___________ என்று அறைந்தார் தந்தை.

a)

பளீர்பளீர்

b)

பளார்பளார்

c)

கடுகடு

15.

இரவு வேளையில் வானத்தில் விண்மீன்கள் __________த்துக் கொண்டிருந்தன.

a)

தகதக

b)

பளபள

c)

மினுமினு