NEW
Font size
Worksheetsதமிழ்மொழி- ஆக்கம் திருமதி வெ.மாச்சாப் (SJKT ALOR GAJAH)
Total questions: 20
Worksheet time: 10mins
விளையாட்டுப் போட்டி அன்று _____ என்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் _____ என்று ஓடினர்.
மள மள, கிடு கிடு
தட தட, குடு குடு
சல சல,குடு குடு
கிடு கிடு, குடு குடு
மனம் + இரங்கினார்
மனமிரங்கினார்
மனமுமிரங்கினார்
மனங்கிரங்கினார்
மனவிரங்கினார்
பலர்பாலைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு.
மாணவன்
மாணவி
ஆசிரியர்கள்
மருத்துவர்
மாதவன்______ இருப்பதால் தன்னைச் சுற்றிலும் நடக்கும் எந்த விபரத்தையும் அறியாது இருக்கிறான்.
அருமை பெருமையாக
குரங்குப் பிடியாக
கிணறுத் தவளையாக
கிள்ளுக் கீரையாக
_____________ களில் சிறந்து விளங்கிய சஞ்சீவனை அனைவரும் பாராட்டினர்.
கல்வி கேள்வி
இன்ப துன்பம்
ஆடை அணிகலன்
அருமை பெருமை
இடப்பெயர் இருக்கும் வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
நான் அறிவியல் கூடம் சென்றேன்.
நான் விண்வெளி வீரராகப் பணிபுரிகிறேன்.
நான் வகுப்பாசிரியருக்கு வணக்கம் கூறினேன்.
நான் யூ.பி.எஸ். ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியடைந்தேன்.
தங்கத்தாமரை =
தங்க + தாமரை
தங்கத் + தாமரை
தங்கம் + தாமரை
தங்கத்து + தாமரை
பின்வரும் வாக்கியங்களில் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
" அனைவரும் நாளைக் அறிவியல் பாடப் புத்தகம் கொண்டு வரவேண்டும் " என்று ஆசிரியர் பணித்தார்.
இன்று அறிவியல் பாடப் புத்தகம் கொண்டு வந்தேன்.
தயவு செய்து உன் அறிவியல் பாடப் புத்தகத்தைத் தருகிறாயா ?
" அறிவியல் பாடப் புத்தகமா? என்னிடம் இல்லை" என்றாள் மதுரி.
உலகெங்கும் தற்போது பரவிக் கொண்டிருக்கும் ' கொரோனா வைரஸ் ' எந்த நகரத்தில் முதலில் தோன்றியது_____.
.
?
;
!
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேந்தெடுக்கவும். நிழலின் அருமை வெயிலில் தெரியும்
நிழலுக்கு வெயிலின் அருமை தெரியும்.
பொருளை நன்கு பாதுகாக்க வேண்டும்.
ஒரு பொருளின் சிறப்புகளை அறிய வேண்டும்.
ஒரு பொருள் அல்லது ஒருவரது அருமை அவர் இல்லாதபோது தான் வெளிப்படும்.
சினைப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடு.
பூ
செடி
தாவரம்
மரம்
வாக்கித்தில் உள்ள எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடு.
பிரவினா இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழாவில் கலந்து கொள்ள முடிவெடுத்தாள்.
பாடம்
பிரவினா
அறிவியல்
முடிவெடுத்தாள்
ஜப்பான் நாட்டிற்குச் சென்ற திவ்யாவும் தர்ஷன்யாவும் இந்தியர் உணவுக் கடையைத் தேடி ______ அலைந்தனர்.
சுற்றும் முற்றும்
தாயும் சேயும்
அங்கும் இங்கும்
கல்வி கேள்வி
யோகன் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ____________ கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறினார்
ஆனால்
ஏனெனில்
ஆகவே
ஏனென்றால்
நீல நிற சொற்களுக்கு ஏற்ற எதிர்சொல்லைத் தேர்ந்தெடு.
நியாயமாக நடந்து கொணட சுபாவால் சரியான தீர்ப்பை வழங்க முடிந்தது.
நன்மை, தீமை
அநியாயம், தவறான
அநியாயம், தீமை
நன்மை, தீமை
உலகம் என்ற சொல்லை ஒத்திவரும் வேறு சொல்லைத் தெரிவு செய்க.
கானகம்
வையகம்
விண்ணுலகம்
மண்ணுலகம்
கூற்று விளக்கும் புணர்ச்சி யாது ?
நிலைமொழியின் ஈற்றில் மெய் எழுத்து இருந்து வருமொழி முதலில் உயிரெழுத்து வருமாயின் அம்மெய்யும் உயிரும் இயல்பாக புணரும்.
தோன்றல்
திரிதல்
இயல்பு
விகாரம்
ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ரதணி எந்தப் பணியைக் கொடுத்தாலும் எளிதில் ________ யாக செய்து முடிப்பாள்.
அவசரக் குடுக்கை
கரைத்துக் குடித்தல்
கிள்ளுக் கீரை
ஆறப் போடுதல்
வாக்கியத்தில் பயனிலைச் சொல்லைக் சுட்டிக்காட்டும் சொல் எது ?
திருமணத்தை உறுதி செய்ய பெரியவர்கள் வெற்றிலையை மாற்றிக் கொண்டனர்.
பெரியவர்கள்
மாற்றிக் கொண்டனர்
வெற்றிலையை
திருமணத்தை
நான்காம் வேற்றுமை உருபை ஏந்திவரும் சரியான சொல் எது ?
பலகையால்
பூவோடு
பள்ளிக்கு
திடலில்
