wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் - இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஓர்

b)

அவை

c)

ஒரு

d)

இவை

2.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

உயிர் எழுத்து - 18

b)

மெய்யெழுத்து - 5

c)

உயிர்மெய் குறில் - 90

d)

உயிர்நெடில் - 6

3.

கிரந்த எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கு மாற்றப்பட்ட சொல் எது?

a)

பட்சி

b)

மட்சி

c)

கட்சி

d)

ஆட்சி

4.

கீழ்க்காண்பனவற்றுள் பொருட்பெயரைத் தெரிவு செய்க.

a)

மென்மை

b)

ஏறுதல்

c)

விமானி

d)

வரைதல்

5.

சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்தது?


தெளிவான சிந்தனை

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை

6.

சேர்த்தெழுதுக


பொன் + தகடு =

a)

பொந்தகடு

b)

பொன்தகடு

c)

பொற்றகடு

d)

பொன்னகடு

7.

சுட்டெழுத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அது வளமான நாடு.

b)

உவன் பெயர் என்ன ?

c)

அந்த மனிதர் பண்பானவர்.

d)

எங்கு எடுத்துச் சென்றாய் ?

8.

கீழ்க்காணும் அனைத்தும் திரிதல் புணர்ச்சியைக் காட்டுகிறது. ஒன்றைத் தவிர

a)

கற்பாறை

b)

பொற்றூண்

c)

பணங்கொடுத்து

d)

சிற்றூர்

9.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

புலி பாய்ந்துச் சென்று மானை வேட்டையாடியது.

b)

திருமண விருந்தில் சிறுவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப் பாடினார்கள்.

c)

தேசிய தினத்தை முன்னிட்டு பள்ளியில் பலக் கொடிகள் கட்டப்பட்டன.

d)

கனத்த மழை பெய்துக் கொண்டிருக்கிறது.

10.

பன்மை சொல்லை ஏற்காத படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
11.

பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவு செய்க.

a)

இந்தக் கடை

b)

நாய்க் குட்டி

c)

கைத்தடி

d)

அறிந்துக்கொண்டார்

12.

மேலேயுள்ள படம் எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் கொண்டதாகும்?

a)

தொழிற்பெயர்

b)

பொருட்பெயர்

c)

சினைப்பெயர்

d)

இடப்பெயர்

13.

கீழ்க்காணும் வாக்கியத்தில் உள்ள பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

டாக்டர் மு.வ. எழுதிய 'கரித்துண்டு' நாவல் பல சமூகக் கருத்துகளை வெளிப்படுத்தியது.

a)

டாக்டர் மு.வ.

b)

சமூகக் கருத்து

c)

எழுதிய கரித்துண்டு நாவல்

d)

கருத்துகளை வெளிப்படுத்தியது

14.

பின்வரும் வாக்கியங்களில் எது வேண்டுகோள் வாக்கியம்?

a)

தம்பி புத்தகம் படித்தான்.

b)

கைகளை மேலே தூக்கு

c)

அமைதியாகப் பேசுங்கள்

d)

வேலைகளைச் சுயமாகச் செய்

15.

படத்திற்கு ஏற்புடைய தொகுதிப்பெயரைத் தெரிவு செய்க.

a)

கொத்து

b)

கதிர்

c)

சீப்பு

d)

குவியல்

16.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வல்லின மெய்யெழுத்தினை ஏற்று வந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடு.

i. காற்று

ii. கம்பு

iii. பஞ்சு

iv. பத்து

a)

i , ii

b)

ii , iv

c)

i , iv

d)

iii , iv

17.

கீழ்க்காண்பனவற்றுள் வன்தொடர் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

விலைக்குத் தந்தான்

b)

ஆடிப் பாடினான்

c)

பாக்குத் தோப்பு

d)

கைக்குட்டை

18.

படத்திற்கு ஏற்ற சரியான ஆண்பாலைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

குயவன்

c)

மனைவி

d)

செம்படத்தி

19.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

இளையோர் தேவையில்லாமல் சமூக வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்கக்கூடாது.__________ , இளமைப் பருவம் வாழ்வில் ஒருமுறையே வரும்.

a)

ஆனாலும்

b)

எனவே

c)

ஏனெனில்

d)

ஆயினும்

20.

கீழ்க்காணும் வாக்கியத்தில் எச்சத்தைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


அருந்ததி தன் வீட்டுப்பாடங்களை விரைவாகச் செய்து முடித்தாள்.

a)

அருந்ததி

b)

வீட்டுப்பாடம்

c)

செய்து

d)

முடித்தாள்