wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மணமில்லாத பொருள்கள் யாவை ?

a)

கல், புட்டி

b)

ரோஜா, அளவுகோல்

c)

பென்சில், மல்லிகை

2.

உணவை மென்று அரைக்க

உதவும் பல் எது ?

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

c)

கோரைப்பல்

3.

பற்கள் எத்தனை வகைப்படும் ?

a)

1

b)

2

c)

3

4.

விலங்குகளின் அடிப்படைத் தேவைகள் யாவை ?

a)

வசிப்பிடம், சூரிய ஒளி

b)

உணவு, காற்று

c)

நீர், சூரிய ஒளி

5.

ஒட்டகத்திற்கு உணவையும் நீரையும் சேமித்து வைக்க உதவும் உறுப்பு எது ?

a)

திமில்

b)

தோல்

c)

இமை

6.

நிலத்திலும் நீரிலும் வாழும் விலங்குகள் யாவை ?

a)

மீன், தேரை

b)

நண்டு, இறால்

c)

சாலமண்டர், தேரை

7.

நேர்க்கோடு நரம்பு கொண்ட தாவரங்கள் யாவை ?

a)

துளசி, கற்பூரவள்ளி, புல்

b)

புதினா, பப்பாளி, கரும்பு

c)

வாழை, தென்னை, மூங்கில்

8.

விதைத்துகள் மூலம் இனவிருத்தி செய்யும் தாவரங்கள் யாவை ?

a)

இஞ்சி, பூண்டு

b)

பெரணி, காளான்

c)

வெங்காயம், காசித்தும்பை

9.

மணல் மண்ணில் செழித்து வளரும்

தாவரங்கள் யாவை ?

a)

நெல், தாமரை

b)

கள்ளி, தென்னை

c)

சோளம்,தக்காளி

10.

கால்கள் இல்லாத விலங்குகள் யாவை ?

a)

எறும்பு, வண்ணத்துப் பூச்சி

b)

வாத்து, தவளை

c)

மரவட்டை, நத்தை

11.

உருவளவைப் பெரிதாக்கிக் காட்டும் கருவி எது ?

a)

நுண்ணோக்காடி

b)

முகவை

c)

உருப்பெருக்காடி

12.

திரவங்கள் கீழே சிந்தாமல்

ஊற்றுவதற்குப் பயன்படும்

கருவி எது ?

a)

புனல்

b)

உருளை அளவி

c)

கூம்புக் குடுவை

13.

நுரையீரல் மூலம் வெளியேற்றப்படும்

கழிவுகள் யாவை ?

a)

வியர்வை, நீராவி

b)

சிறுநீர், கரிவளி

c)

கரிவளி, நீராவி

14.

எளிதில் கடத்திகள் யாவை ?

a)

கையுறை, நொய்வம், அழிப்பான்

b)

காகிதச் செருகி, உலோகக் கரண்டி, ஆணி

c)

காலணி, கவண், நீர் உறிஞ்சி

15.

குறையொளி புகும் பொருள் எது ?

a)

அச்சுத்தாள்

b)

ஆடிக்குவளை

c)

அட்டைப்பெட்டி

16.

இக்கோளில் நீர் உலர்ந்த நிலையில் இருக்கும், சிவப்பு கோள் என்றும் அழைக்கப்படும் ?

a)

வருணன்

b)

நிருதி

c)

செவ்வாய்

17.

பனிக்கட்டி, தூசு மற்றும் உறைந்த வாயுக்களால் ஆன இயற்கைத் துணைக்கோள் எது ?

a)

வால்மீன்

b)

எரிகல்

c)

விண்கல்

18.

கோள்களைப் பார்க்கப் பயன்படும் தொழில்நுட்பக் கருவி எது ?

a)

இணைப்பார்வை நோக்காடி

b)

தொலைநோக்காடி

c)

நுண்ணோக்காடி

19.

சுற்றுச் சூழலுக்கு ஏற்ப நிறத்தை மாற்றும் விலங்கு எது ?

a)

பெருமாள் பூச்சி

b)

கரப்பான் பூச்சி

c)

தட்டான்

20.

மிதவைத் திறம் கொண்டது, காற்றறைகள் மற்றும் மேற்பகுதி மெழுகுத்தன்மை உடையது ?

a)

பொங் பொங்

b)

நொய்வம்

c)

அங்சானா