wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 4- Part 2

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது கேட்டல் முறையில் உற்றறிதல் ஆகும்.

a)

மாலையில் மழை பெய்யும் என்று அனுமானித்தல்

b)

வெவ்வேறு ஒலிகளைக் கேட்டு வகைப்படுத்துதல்

c)

சுவைபானத்தை சுவைத்தல்

d)

செடியின் வளர்ச்சியைக் குறிப்பிடுதல்

2.

ஓர் ஆய்வில் மாறிகளைக் கட்டுப்படுத்துவதின் நோக்கம் என்ன?

a)

ஆய்விற்கான செலவுகளைக் குறைக்க

b)

ஆய்விற்கான நேரத்தைக் குறைக்க

c)

ஆய்வில் சரியான முடிவைக் கண்டறிய

d)

ஆய்வில் விபத்துகளைத் தவிர்க்க

3.

மலம் கழித்தல் என்பதன் பொருள் என்ன?

a)

செரிமனமாகாத உணவை வெளியேற்றுதல்.

b)

சிறுநீர் கழித்தல்

c)

வியர்வையை வெளியேற்றுதல்

d)

உடலுக்குத் தேவையற்றப் பொருள்களை அகற்றுதல்

4.

எது மனிதனின் சுவாசித்தல் செயற்பாங்கிற்குத் தொடர்புடையது அல்ல?

a)

மூக்கு

b)

நுரையீரல்

c)

தோல்

d)

சுவாசக்குழாய்

5.

கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?

a)

காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்

b)

காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்

c)

காற்றை வெளியேற்றம் பொழுது அதிகமான உயிர்வளி இருக்கும்

d)

காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான நீர் இருக்கும்.

6.

ஒரு மனிதனின் சுவாச வீதம் எப்போது மாற்றம் அடையும்?

a)

நடவடிக்கை மாறும்போது

b)

பார்க்கும் போது

c)

உறங்கும்போது

d)

நாளிதழ் செய்தியை வாசிக்கும்போது

7.

மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில் _____________உயிர்வளியும் ________________ கரிவளியும் இருக்கும்.

a)

குறைவான, அதிகமான

b)

அதிகமான, அதிகமான

c)

அதிகமான, குறைவான

d)

குறைவான, குறைவான

8.

கீழ்க்காண்பனவற்றுள் கழிவகற்றும் உறுப்பைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

மூக்கு

b)

நுரையீரல்

c)

சுவாசக்குழாய்

d)

இருதயம்

9.

மனிதனின் தூண்டலையும் துலங்கலையும் காட்டும் சரியான இணை எது?

a)

வெடிச்சத்தம் கேட்டல் - காதுகளை மூடிக் கொள்ளுதல்

b)

துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்

c)

முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்

d)

வெளிச்சத்தைப் பார்த்தல் - காதை மூடிக்கொள்ளுதல்.

10.

ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் ‘ஹார்ன்’ சத்தத்தைக் கேட்டு

உடனே விலக முடியவில்லை ஏன்?

a)

அவருக்கு காது கேட்கவில்லை

b)

அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.

c)

அவர் உறங்கிவிட்டார்

d)

அவர் வேண்டுமென்றே நகர மறுக்கிறார்

11.

உன் பள்ளியின் பெயர் என்ன?

a)

SJKT RAUB

b)

SJKT LADANG TEBRAU

c)

SJKT MAHATMA GANDHI

d)

SJKT KANGAR

e)

SJKT BAYAN LEPAS