Worksheetsதமிழ்மொழி (இலக்கணம்)
Total questions: 10
Worksheet time: 3mins
1. எழுவாயைக் கண்டறிக.
கபிலன் ஓவியம் வரைகிறான்.
ஓவியம்
வரைகிறான்
கபிலன்
2. வாக்கியத்தில் படர்க்கை சொல்லைத் தெரிவு செய்க.
கந்தனும் அவனது நண்பர்களும் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.
பல்லாங்குழி
கந்தனும்
நண்பர்களும்
அவனது
3. ஐ என்ற உருபு அடங்கிய சொற்களைத் தெரிவு செய்க.
குதிரை
கடிவாளத்தை
புத்தகத்தை
ஆபத்தை
4. எதிர்காலத்தைக் காட்டும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கதிரவன் ஓவியம் வரைவான்.
கதிரவன் ஓவியம் வரைந்தான்.
கதிரவன் ஓவியம் வரைகிறான்.
5. சரியான வினாச்சொல்லைத் தெரிவு செய்க.
நீ நேற்று _________________ சென்றாய்?
என்ன
எங்கு
எப்போது
எதற்கு
6. சரியான பால் சொல்லைத் தெரிவு செய்க.
சிறுமி மேடையில் நடனம் _______________.
ஆடுகிறான்
ஆடுகிறார்கள்
ஆடியது
ஆடுகிறாள்
7.படத்திற்கு ஏற்ற ஒரே பொருள் தரும் சொற்களைத் தெரிவு செய்க.
அக்னி
தீ
நெருப்பு
நீர்
8. வாக்கியத்திலுள்ள செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
கஜேந்திரன் வீட்டிற்குச் சாயம் பூசுகிறான்.
சாயம்
வீட்டிற்கு
கஜேந்திரன்
பூசுகிறான்.
9. சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
சாயத்தைப் பூசினான்
கடைக்குச் சென்றான்
புத்தகத்தை கிழித்தான்
பாடத்தை செய்தான்
10. இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
பாக்கு
கொஞ்சம்
கசப்பு
விரிப்பு
