NEW
Font size
WorksheetsUPSR தமிழ்மொழி (தொகுதி 2) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
ஒவ்வொரு மாத இறுதியிலும் அம்மா வீட்டின் _________ கணக்குகளை எழுதி வைப்பார்.
வரவு செலவு
அல்லும் பகலும்
பழக்க வழக்கம்
மூலை முடுக்கு
இக்கூற்றுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அக்கா! சும்மா எடுத்ததற்கெல்லாம் மருந்து சாப்பிடாதீங்க.
ஊண்மிக விரும்பு
ஔடதம் குறை
ஈகை திறன்
ஏறுபோல் நட
கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்திற்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
உதயமலர் பசியென்று வந்தவர்களுக்கு இல்லையென்று சொல்லாமல், மலர்ந்த முகத்துடன் உபசரிப்பாள்.
ஒப்புரவு வொழுகு
ஐய மிட்டுண்
ஊக்கமது கைவிடேல்
ஔவியம் பேசேல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
"மாணவர்களே, நீங்கள் சிறுவயது முதல் சிரத்தையுடன் கல்வி கற்க வேண்டும். அப்பொழுதுதான் உங்கள் மனத்தில் ஆழமாகப் பதியும்,” என்று ஆசிரியர் கூறினார்.
இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து
மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
புதிய ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
இளைத்தல் இகழ்ச்சி
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
கீழ்க்காணும் செய்யுளடிகளைப் பூர்த்தி செய்க.
போகாத _________ போக வேண்டாம்
விடந்தனிலே
விடத்திற்குப்
விடத்தில்
இடந்தனில்
கீழ்க்காணும் கூற்றுக்கு மிகப் பொருத்தமான கொன்றை வேந்தன் யாது?
மாதவனும் கயல்விழியும் வீட்டு வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்து விடுவர். பெற்றோர் என்றும் அகமகிழ்ந்து போவர். இவர்கள் இருவரும் பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகளாக விளங்கினர்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
ஏவா மக்கள் மூவா மருந்து
கொடுக்கப்பட்ட செய்யுளில் எது வெற்றிவேற்கை அல்ல?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
பிரேசர் மலையடிவாரத்தில் _________ வென ஓடிய ஓடையின் சத்தம் காதிற்கு இதமாக இருந்தது.
கிலுகிலு
திருதிரு
மடமட
சலசல
பிறந்தநாளன்று தான் விரும்பிய மிதிவண்டியையே பரிசாகப் பெற்றதை எண்ணி, செல்வன் ___________ .
உச்சி குளிர்ந்தான்
ஒரு கை பார்த்தான்
மனப்பால் குடித்தான்
ஒற்றைக் காலில் நின்றான்
