NEW
Font size
Worksheetsஇரட்டைக்கிளவி ஆக்கம் ஜயந்தி மதியழகன்
Total questions: 14
Worksheet time: 7mins
அந்த நீர்வீழ்ச்சியின் நீரின் சத்தம் _____________வென கேட்டது.
மடமட
சலசல
கலகல
நறநற
திரைப்பட நடிகர் திரு வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்து மக்கள் ___________வென சிரித்தார்கள்.
கலகல
சலசல
மடமட
மளமள
ஜப்பானில் நடைப்பெற்ற நிலநடுக்கத்தில் கட்டடங்கள் __________வென சரிந்தன.
தடதட
கடுகடு
நறநற
மடமட
இரவு நேரத்தில் தன் வீட்டின் கதவைத் __________ வென தட்டிய தம்பியை அம்மா ஏசினார்.
மடமட
மளமள
தடதட
மினுமினு
வீட்டின் முன்புறத்தில் உள்ள பூச்சாடியை உடைத்த தம்பியின் மீது கோபம் கொண்ட அம்மா பல்லை -_________வென கடித்தார்.
நறநற
கடுகடு
பளபள
பளார்பளார்
ஆசிரியர் கொடுக்கும் பாடங்களை ___________வென செய்ததால், அல்லி பாராட்டைப் பெற்றாள்.
நறநற
மடமட
குடுகுடு
மளமள
முதலாளி காலையில் யாரிடமும் பேசாமல் __________வென இருந்தார்.
மினுமினு
நறநற
சலசல
கடுகடு
சிறு குழந்தை அங்கும் இங்கும் ________வென ஒடுவதைக் கண்டு அனைவரும் இரசித்தனர்.
குடுகுடு
தடதட
மளமள
நறநற
இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் -___________ வென மின்னுகின்றன.
பளபள
மினுமினு
தகதக
பளார்பளார்
காவல்துறை அதிகாரிகளுக்குக் கம்பி நீட்டிய திருடன் கையும் களவுமாய் பிடிப்பட்டதும் _________வென விழித்தான்.
கடுகடு
திருதிரு
சிடுசிடு
மடமட
அந்தக் குழந்தை அழுந்தவுடன் அம்மா _________வென ஒலிக்கும் கிலுகிலுப்பை ஆட்டியதும், குழந்தை அம்மாவைப் பார்த்து சிரித்தது.
நறநற
கலகல
மினுமினு
கிலுகிலு
காலையில் உதிக்கும் சூரியனின் ஒளி ________வென இருக்கும்.
தகதக
பளபள்
பளீர்பளீர்
மினுமினு
எதிர்த்துப் பேசிய மகனை அம்மா ________வென அறைந்தார்.
பளீர்பளீர்
பளார்பளார்
தடதட
கடுகடு
அகிலா வாங்கிய வெள்ளிக்கொலுசு _________வென மின்னின.
தகதக
கலகல
பளார்பளார்
பளபள
