NEW
Font size
Worksheetsஇலக்கணம் (படிவம் 4)
Total questions: 10
Worksheet time: 3mins
கீழ்க்காணும் சொற்களில் எது வன்தொடர் குற்றியலுகரம்
கழுகு
பாட்டு
ஏறு
பங்கு
மென்தொடர் குற்றியலுகரம் அல்லாத சொல் எது?
நான்கு
மடங்கு
வண்டு
தேக்கு
குற்றியலுகரம் என்றால் என்ன?
வல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும்
மெல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும்
இடையின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் இறுதியில் வரும்போது குறுகி ஒலிக்கும்
வல்லின உகரங்கள் (கு,சு,டு,து,பு,று) சொல்லின் முதலில் வரும்போது குறுகி ஒலிக்கும்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்
தூசு, படகு, முதுகு
சங்கு, கதவு, செம்பு
கிணறு, காய்ச்சு,விறகு
மரபு, பரிசு, கரடு
மல்லிகை மலர்ந்தது என்பது என்ன ஆகுபெயர்?
இடவாகு பெயர்
பொருளாகு பெயர்
சினையாகு பெயர்
காலவாகு பெயர்
கீழ்க்காண்பனவற்றுள் எது தொழிலாகு பெயர் அல்ல?
ஆசிரியர் போதித்தார்
பொங்கல் உண்டான்
வறுவல் சமைத்தார்
பொரியல் வாங்கினாள்
தெற்கு + நாடு எனும் சொல்லின் சரியான புணர்ச்சி சொல் எது?
தெந்நாடு
தென்நாடு
தென்னாடு
தெற்கு நாடு
சரியான எண்ணுப்பெயர்ப் புணர்ச்சியைத் தேர்ந்தெடுக்கவும்
ஐந்து + ஐந்து = ஐந்தைந்து
ஆறு + ஆறு= ஆறாறு
மூன்று + மூன்று = மும்மூன்று
ஒன்று + ஒன்று = ஒன்றொன்று
கீழ்த்திசை எனும் சொல்லைப் பிரித்தெழுதவும்
கிழக்கு + திசை
கீழ் +திசை
கிழ + திசை
சரியான சினையாகுப் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்
வாழைக் கறி,உலகம் போற்றியது
கார்த்திகை மலர்ந்தது, அவியல் விற்றாள்
நாடு வென்றது, பூசணி சாம்பார்
கத்தரி நட்டார், தலைக்குப் பத்து வெள்ளி
