wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் / இலக்கியம் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் எழுத்துகளின் வகையைத் தெரிவு செய்க.

ஆ , ஈ , ஊ , ஏ , ஐ , ஓ , ஔ

a)

உயிர்மெய் எழுத்து

b)

உயிர்நெடில் எழுத்து

c)

உயிர்மெய் நெடில்

d)

உயிர்மெய்க் குறில்

2.

கீழ்க்காணும் எழுத்தியல் இலக்கணத்தில் சரியானதைத் தெரிவு செய்க.

a)

க் , ச் , ட் , த் ,ப் ,ற் - மெல்லினம்

b)

ய் ,ர் .ல் , வ் , ழ் , ள் - இடையினம்

c)

ங் , ஞ் , ண் , ந் , ம் , ன் - வல்லினம்

d)

ஃ - உயிர் எழுத்து

3.

தமிழ் நெடுங்கணக்கு ( எழுத்தியல் ) மொத்தம் எத்தனை ?

a)

247

b)

212

c)

216

d)

12

4.

வல்லினத்திற்கு மெல்லினம் இனமாகும்

a)

வளைவு

b)

பட்டம்

c)

தங்கை

d)

துணி

5.

உயிர் எழுத்துகளின் சரியான எண்ணிக்கையைத் தெரிவு செய்க.

a)

6 நெடில் 6 குறில்

b)

5 நெடில் 7 குறில்

c)

5 குறில் 7 நெடில்

d)

6 நெடில் 7 குறில்

6.

சுட்டு எழுத்துகளைத் தெரிவு செய்க

a)

அ , இ , ஊ

b)

அ , இ , எ

c)

இ , எ , ஏ .

d)

அ , இ , உ

7.

தவறான கூற்றைத் தெரிவு செய்க.

a)

எ , யா - சொல்லின் முதல் எழுத்தாக வரும்

b)

ஆ , ஓ - சொல்லின் இறுதி எழுத்தாக வரும்

c)

எ , ஏ , ஆ - சொல்லின் இறுதியாக வரும் எழுத்துகள்

d)

ஏ - சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்

8.

அங்கு , அவன் , அது என்பது

a)

சேய்மைச்சுட்டு

b)

அண்மைச்சுட்டு

c)

சேய்மைச்சுட்டுக்கும் அண்மைச்சுட்டுக்கும் இடையே உள்ள பொருளைக் குறிக்கும்

9.

அண்மைச்சுட்டு அல்லாத வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அங்கு வந்த மதனியைக் கண்டு அனைவரும் திகைத்து நின்றனர்.

b)

இவன் என் தம்பி.

c)

இது நான் தீட்டிய ஓவியம்

10.

பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

கொக்கு + பறந்தது = கொக்கு பறந்தது

b)

பட்டு + சட்டை = பட்டுச்சட்டை

c)

வெற்று + தாள் = வெற்றுத்தாள்

d)

பத்து + காசு = பத்துக்காசு