NEW
Font size
Worksheetsதமிழ்மொழி- பெயர்சொற்கள் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL.
Total questions: 15
Worksheet time: 7mins
வாக்கியத்தில் விடுப்பட்ட சரியான பண்புப்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.
கடற்கரையோரத்தில் தென்னை மரங்கள் _____________ வளர்ந்திருந்தன.
பரிவாக
உயரமாக
கருமையாக
கீழ்க்காண்பவற்றில் எது தொழிற்பெயரைக் குறிக்கின்றது?
ஓடுதல்
மருத்துவர்
பள்ளிக்கூடம்
கீழ்க்காண்பவற்றில் எது சினைப்பெயரைக் குறிக்கும்?
வீடு
விமானம்
கிளை
தவறான இணையைத் தெரிவு செய்க.
இடப்பெயர் - திடல், கோவில்
பண்புப் பெயர்- வாய், கை
தொழிற்பெயர் - உரமிடுதல், சிரித்தல்
அதிகாலையில் அப்பா வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பினார்.
வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எவ்வகையைச் சார்ந்தது?
சினைப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
குருவி இரையைத் தின்றது.
குருவி
இரை
தின்றது.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
அத்தை மீன்குழம்பு சமைத்தார்.
அத்தை
மீன்குழப்பு
சமைத்தார்
அத்தை , மீன்குழம்பு
பின்வருவனவற்றுள் எது பண்புப் பெயராகும்.
கிளை
அன்பு
வணங்கு
ஆசிரியர்
கீழ்க்காண்பனவற்றுள் பண்புப்பெயரைத் தெரிவு செய்க.
மென்மை
ஏறுதல்
விமானி
வரைதல்
கொடுக்கப்பட்ட உரையாடலில் வண்ணமிடப்பட்டுள்ள சொல் உணர்த்தும் பெயர்ச்சொல் வகையைத் தெரிவு செய்க.
ஆசிரியர் : நேற்று கொடுத்த வீட்டுப்பாடத்தைச்
செய்து முடித்து விட்டீர்களா?
மாணவன் : ஐயா, என்னை மன்னித்து விடுங்கள். என்
கையில் காயம் ஏற்பட்டு விட்டதால்
என்னால் எழுத முடியவில்லை.
இடப்பெயர்
காலப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
காலத்தின் பெயரைக் குறிப்பது.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது
ஒருவரின் குணத்தைக் குறிப்பது.
ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.
கீழ்க்காணும் வாக்கியங்களில் இடம் பெறாத பெயர்ச்சொல் எது?
கற்பித்தல் ஆசிரியர் பணி. அப்துல் கலாம் தமிழ்ப் பற்றுமிக்கவர். அம்மா அன்பானவர்.
பண்புப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
8. வாக்கியத்திலுள்ள தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
சோபன் வீட்டிற்குச் சாயம் பூசுகிறான்.
சாயம்
வீட்டிற்கு
சோபன்
பூசுகிறான்.
ஒரு பொருளின் பகுதிகளை அல்லது உறுப்புகளைக் குறிப்பது ...
பண்புப்பெயர்
சினைப்பெயர்
பொருட்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
வீடு
விவசாயி
தோட்டம்
கிளை
