wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் ஆண்டு 4

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


வையத்துள் என்பதன் பொருள் என்ன?

a)

மனிதன்

b)

உலகம்

c)

மண்

2.

அண்டை அயலாரின் பொருள் என்ன?

a)

முன்புறத்தில் உள்ளவர்கள்

b)

பக்கத்தில் உள்ளவர்கள்

c)

சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள்

3.

எந்தக் காலத்திலும் என்ற பொருளுக்கு ஏற்ற இணைமொழி எது?

a)

அங்கும் இங்கும்

b)

அன்றும் இன்றும்

c)

மேடு பள்ளம்

4.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம் என்ற உலகநீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

b)

மனசாட்சிக்குப் பிடித்த பொய் சொல்லலாம்

c)

மனசாட்சிக்கு விரோதமாக உண்மை சொல்லக்கூடாது.

5.

திரு. கண்ணனின் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

c)

கங்கணம் கட்டுதல்

6.

கமலா வெறும் கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தாள்.

a)

மனக்கோட்டை

b)

தொன்று தொட்டு

c)

கடுக்காய் கொடுத்தல்

7.

அப்துல் கலாம் - சிறந்த விஞ்ஞானி.

- ஏவுகணைச் சிற்பி

a)

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

b)

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

c)

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

8.

வீட்டுப் பாடத்தைச் செய்து முடிக்காத முரளி ஆசிரியரைப் பார்த்ததும் மனம் வருந்தினான்.

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

9.

கீதா பழைய நாளிதழ்கள் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்கள் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

அழுத பிள்ளை பால் குடிக்கும்

10.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை ...


மதிகெட்டு என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

கௌரவம் தெட்டு

b)

மானம் அழிந்து

c)

அறிவிழக்க

11.

உடல் ஊனமுற்ற கமலனை உற்றார் உறவினர் அனைவரும் பாதுகாத்தனர்.

a)

சிலைமேல் எழுத்து போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

எலியும் பூனையும் போல

12.

ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களைக் கவனமாகக் கேட்க வேண்டும். கல்வி கர்பிக்கும் ஆசிரியர்கள் நமக்கு கண்கண்ட தெய்வங்களாவர்.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

c)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

13.

அம்மா __________என மின்னிய வெள்ளிப் பாத்திரங்களை வாங்கினார்.

a)

பளபள

b)

தகதக

c)

கடுகடு

14.

தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என வனஜா விடாமுயற்சியுடன் படிக்கிறாள்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

15.

கீதா : ஏன் எப்பொழுதும் நீ படித்துக் கொண்டே இருக்கிறாள்?


மாலா : எந்த அளவிற்கிற்கு நாம் படிக்கின்றோமோ அந்த அளவிற்கு நம் அறிவு வளரும்.

a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

b)

காந்தம் இரும்பைக் கவர்வது போல

c)

தொட்டணைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு