Worksheetsஇலக்கணம் (யு.பி.எஸ்.ஆர்)
Total questions: 10
Worksheet time: 5mins
1.பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
“நான் என் வீட்டுப் பாடத்தைச் செய்து முடித்து விட்டேன்,” என்றாள் அமுதா.
A. செய்தி வாக்கியம்
B. அயற்கூற்று வாக்கியம்
C. வினா வாக்கியம்
D. நேர்க்கூற்று வாக்கியம்
2.புணர்ச்சியில் விடுபட்ட எழுத்தைத் தெரிவு செய்க
பொது + உறவு = பொது __ றவு
A.யு
B.உ
C.வு
D, று
3.கவினுக்குக் கடுமையான காய்ச்சல். __________ அவன் பள்ளிக்குச் சென்றான்
A.ஆனால்
B.இருப்பினும்
C.எனவே
D.ஆகவே
4.தவறாக வலிமிகுந்துள்ள இணையைத் தெரிவு செய்க.
A. அவை + படகுகள் = அவைப் படகுகள்
B. இவை + சிலைகள் = இவை சிலைகள்
C. எவை + போயின = எவை போயின
D. இவை + தப்பின = இவை தப்பின
5.பின்வரும் புணர்ச்சியின் விதியினைத் தெரிவு செய்க.
அ + தலைவன் = அத்தலைவன்
A சுட்டு + உயிர்மெய்
B சுட்டு + யகரம்
C சுட்டு + எகரம்
D எகரவினா + யகரம்
6.பின்வரும் வாக்கியங்களில் இடைச்சொல் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. தேசிகன் அற்புதமாகக் கவிதைகள் இயற்றுவார். ஆயினும், அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
B கல்வி நமக்குக் கண் போன்றது. ஆனாலும், அதனைத் திறம்படக் கற்க வேண்டும்
C ஆசிரியர் திரு. கவிஅமுதன் மிகவும் அன்பானவர். என்றாலும் கண்டிப்பு மிக்கவர்.
D மைக்கல் ஜாக்சன் உலகத்தாரால் போற்றப்பட்டார். இருப்பினும், அவர் ஒரு சிறந்த பாடகர்.
7.பின்வரும் புணரியல் தொடர் எவ்வகை புணர்ச்சியைச் சார்ந்தது?
அ + குதிரை = அக்குதிரை
A. இயல்பு புணர்ச்சி
B.தோன்றல் புணர்ச்சி
C.திரிதல் புணர்ச்சி
D.கெடுதல் புணர்ச்சி
8.இந்தப் பென்சில் உன்னுடையதா ___________ விமலாவுடையதா?
A உம்
B மற்றும்
C மட்டுமல்லாது
D அல்லது
9.சேர்த்தெழுதுக.
அரும் + தமிழ்
A அருமைத்தமிழ்
B அரும்தமிழ்
C அருந்தமிழ்
D அத்தமிழ்
10.பிரித்தெழுதுக.
மட்குடம்
A மட் + குடம்
B ம + குடம்
C மட்கு + டம்
D மண் + குடம்
