wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு_2

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

____________ கருத்துக் காணப்பட்டது. அதனால், நான் என் குடையை எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.

a)

வாணம்

b)

வானம்

2.

திருமதி சாந்தி கடையிலிருந்து அப்பளங்கள் வாங்கி வந்தார். அவர் அப்பளங்களைப் ____________ உணவுடன் பரிமாறினார்.

a)

பொரித்து

b)

பொறித்து

3.

அதிர்ஷ்டக் குலுக்கில் முத்துவுக்கு முதல் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும் அவன் ஒரு ____________ திகைத்துப்போய் நின்றான்.

a)

கணம்

b)

கனம்

4.

அன்று எனக்குக் கடுமையான காய்ச்சல். என் நண்பர்கள் என் மீது காட்டிய ____________ கண்டு என் மனம் நெகிழ்ந்தது.

a)

அக்கரையை

b)

அக்கறையை

5.

தேன்மொழி கடிதத்தை எழுதி முடித்தாள். அவள் அதை ஓர் ____________ வைத்து ஒட்டினாள்.

a)

உரையில்

b)

உறையில்

6.

பலதரப்பட்ட நூல்களை வாசிப்பது நல்ல பழக்கமாகும். இப்பழக்கம் பல தகவல்களை நாம் ____________ வைத்திருக்க உதவும்.

a)

அறிந்து

b)

அரிந்து

7.

மாணவர்கள் சிலர் பள்ளி முடிந்து சாலையைக் கடந்துகொண்டிருந்தார்கள். அதைக் கண்ட திரு ராமு தம் வாகனத்தின் வேகத்தைக் ____________ ஓட்டினார்.

a)

குரைத்து

b)

குறைத்து

8.

____________ முடிந்து திரு இளங்கோ பசியோடு வீடு திரும்பினார். அதை உணர்ந்த அவருடைய மனைவி அவருக்கு உடனே உணவு பரிமாறினார்.

a)

வேலை

b)

வேளை

9.

மீனா ஓட்டப்பந்தயத்தில் முதலாவதாக வந்தாள். பள்ளி முதல்வர் அவளுக்கு வாழ்த்துக் கூறித் தங்கப்பதக்கம் ஒன்றையும் ____________.

a)

அழித்தார்

b)

அளித்தார்

10.

மரத்தில் மாம்பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. என் மாமா மரத்தில் ____________ அவற்றைப் பறித்தார்.

a)

ஏரி

b)

ஏறி

11.

நாய் நன்றியுள்ள பிராணி. அது தன்னை வளர்ப்பவரைக் கண்டதும் மகிழ்ச்சியோடு ____________ ஆட்டும்.

a)

வாலை

b)

வாளை

12.

என் அண்ணன் கடந்த இருபது ஆண்டுகளாக ஆசிரியராகப் ____________ புரிகிறார். அண்மையில், அவருடைய சிறப்பான சேவையைப் பாராட்டி அவருக்கு விருது வழங்கப்பட்டது.

a)

பணி

b)

பனி

13.

குணா தன் நண்பனின் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தான். ஆனால், அவன் அங்கே செல்வதற்கு ____________ தெரியாமல் தடுமாறினான்.

a)

வழி

b)

வலி

14.

நான் ஒவ்வொரு நாளும் _______________ மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன். அதனால், நான் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறேன்.

a)

அறை

b)

அரை

15.

எங்கள் பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. அதில் எங்கள் ____________ தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

a)

முன்னால்

b)

முன்னாள்

16.

மைதிலி மேடையில் நடனம் ஆடி முடித்ததும் அரங்கில் பலத்த கரவொலி எழுந்தது. அந்த ____________ அவள் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

a)

கனம்

b)

கணம்

17.

“அறை ஒரே இருட்டாக இருக்கிறது. சன்னல் ____________ சற்று விலக்கினால் வெளிச்சமாக இருக்கும்,”என்று என் அன்னை கூறினார்.                

a)

திரையை

b)

திறையை

18.

“ஆசிரியர் கல்விச் சுற்றுலாவைப் பற்றிக் கூறியதும் அதைப் பற்றிய ____________    

அலைகளில் மூழ்கிவிட்டாயா ரமேஷ்? நான் அழைத்ததைக்கூட நீ கவனிக்கவில்லையே!” என்று ரகு கேட்டான்.                                                

a)

என்ன

b)

எண்ண

19.

கல்பனா நடனப்போட்டியில் முதல் பரிசு பெற்றாள். அதனால், அவள் ____________ மகிழ்ச்சி அடைந்தாள்.                                                

a)

பெறும்

b)

பெரும்

20.

திருவள்ளூவர் மக்களுக்குப் பல அறக்கருத்துகளைக் கூறியுள்ளார். அவருடைய       ____________ படித்து நாம் அனைவரும் பயன் பெற வேண்டும்.            

a)

குறளை

b)

குரலை