wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 5 இலக்கணம்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான இடைச்சொல்லைத் தெரிவு செய்க

சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நாளை பாரம்பரிய உடை __________ பள்ளிச் சீருடை அணிந்து வர வேண்டும்.

a)

அல்லது

b)

ஆயினும்

c)

ஆனாலும்

d)

இருப்பினும்

2.

வாக்கியத்தில் விடுப்பட்ட இடைச்சொல்லைத் தெரிவு செய்க.

யாழினி பரதக்கலையில் சிறந்து விளங்கினாள். ___________, தனது திறமையை மேம்படுத்த வெளிநாடு சென்றாள்.

a)

இன்னும்

b)

அதற்காக

c)

ஆயினும்

d)

ஏனெனில்

3.

  1. சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அங்குச் செல்

b)

அவர்கள் வந்தனர்

c)

அந்த நாள்

d)

இங்கு வர

4.

நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயர்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க

"நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,'' என்று அகிலன் கூறினான்.

a)

தான் மகிழ்ச்சியாக இருப்பதாக அகிலன் கூறினான்.

b)

மகிழ்ச்சியாக இருப்பதாக அகிலன் கூறினான்.

c)

அகிலன் மகிழ்ச்சியாக இருக்கிறான்.

d)

அகிலன் மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் கூறினான்.

5.

அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

சரவணன் தனது நண்பர்களுடன் சினிமா சென்றான்.

a)

''சரவணன் சினிமா சென்றான்,'' என்று நண்பர்கள் கூறினார்கள்.

b)

''சரவணன் தனது நண்பர்களுடன் சினிமா சென்றான்,'' என்று அவன் கூறினான்.

c)

''சரவணன் தனது நண்பர்களுடன் சினிமா சென்றது,'' என்று அவன் கூறினான்.

d)

''நண்பர்கள் சரவணனுடன் சினிமா சென்றனர்,'' என்று கூறினார்கள்.

6.

அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.

அமுதினி தன் அண்ணனுக்குப் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்துள்ளதாக கயல்விழியிடம் கூறினாள்.

a)

''என் அண்ணனுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது,'' என்று கயல்விழி அமுதினியிடம் கூறினாள்.

b)

''என் அண்ணனுக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளது,'' என்று அமுதினி கயல்விழியிடம் கூறினாள்.

c)

''அமுதினிக்குப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துள்ளதாக ,'' அண்ணன் கயல்விழியிடம் கூறினாள்.

d)

''கயல்விழிக்குப் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்துள்ளது,'' என்று தன் அண்ணனிடம் கூறினாள்.

7.

சூழலில் கோடிட்ட சொல்லைப் பிரித்தெழுதுக.

குயவன் தன் திறமையால் அழகான வடிவில் மட்பாண்டம் வனைந்தான்.

a)

மட் + பாண்டம்

b)

மல் + பாண்டம்

c)

மன் + பாண்டம்

d)

மண் + பாண்டம்

8.

சூழலில் கோடிட்ட சொல்லைப் பிரித்தெழுதுக.

குருவி தனது திறமையால் அழகான வடிவில் பூங்கொத்தி வனைந்தாள்.

a)

பூ + கொத்தி

b)

பூ + குத்தி

c)

பூ + கொத்தி

d)

பூ + குத்தி

9.

சேர்த்தெழுதுக.

அ + தலைவன் =

a)

அட்தலைவன்

b)

அற்றலைவன்

c)

அத்தலைவன்

d)

அக்தலைவன்

10.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அங்கு போ

b)

அன்றே வந்தான்

c)

இங்கு செய்

d)

அவைப் படங்கள்

11.
  1. சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அங்கேப் பார்

b)

இப்படிச் செய்

c)

அவைப் படகுகள்

d)

அன்றுச் சென்றான்

12.

சரியான விடையைத் தெரிவு செய்க.

a)

பத்து+ காசு = பத்து காசு

b)

தப்பு + கணக்கு = தப்பு கணக்கு

c)

விற்று + தந்தான் = விற்றுத் தந்தான்

d)

சென்று + பார்த்தான் = சென்றுப் பார்த்தான்

13.

சரியான வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

அந்த பையன்

b)

அப்படி சொல்

c)

எவ்வளவு தூரம்

d)

அங்கு சென்றான்

14.

சரியான வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.

திருவள்ளுவர் __________ இயற்றினார்?

a)

இத்தனை திருக்குறள்கள்

b)

எத்தனை திருக்குறள்கள்

c)

இத்தனைத் திருக்குறள்கள்

d)

எத்தனைத் திருக்குறள்கள்

15.

மகர மெய்யீறு இடையினத்தோடு புணரும் தொடரைத் தெரிவு செய்க.

a)

இ+ படகு = இப்படகு

b)

மண்+குடம் = மட்குடம்

c)

பொன்+ பாதம் = பொற்பாதம்

d)

வாணம்+வேடிக்கை= வாணவேடிக்கை