wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 6,

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை என்பதைத் தெரிவு செய்க.

a)

12

b)

30

c)

18

d)

216

2.

படத்திற்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கண்டறிக.

a)

கடகட

b)

கிடுகிடு

c)

மடமட

d)

சரசர

3.

கீழ்க்காணும் படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

b)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

c)

நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

d)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்.

4.

மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

c)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

d)

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

5.

கொடுக்கப்பட்ட சூழலுக்கு எதிர்மறையான பழமொழியைத் தெரிவு செய்க. (KBAT)


சிறுவயதில் அண்ணன் செய்த உதவியை மாறன் இன்று மறந்துவிட்டான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

d)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

6.

கீழ்க்காணும் நல்வழி செய்யுளடிகளை நிரல்படுத்துக.


I ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

II நல்லார்க்கும் பொல்லனாம் நாடு

III எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்

IV மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை

a)

I, II, IV, III

b)

I, IV, III, II

c)

I, II, III, IV

d)

II, I, III, IV

7.

வியாபாரத்தில் கடும் நஷ்டத்தை எதிர்நோக்கிய அலி மிகவும் வறுமையில் வாடினான். தக்கச் சமயத்தில் சீலன் அவனுக்குத் தன்னால் முடிந்தவரை __________.

a)

கங்கணம் கட்டினான்

b)

ஒரு கை பார்த்தான்

c)

தோள் கொடுத்தான்

d)

உச்சிக் குளிர்ந்தான்

8.

ஏழ்மை நிலையில் குடும்பச் சூழலிலும் அயராது கல்வி கற்று யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 8 ஏக்கள் பெற்றான்

a)

சிலை மேல் எழுத்து போல

b)

சூரியனைக் கண்ட பனி போல

c)

இலைமறை காய் போல

d)

சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல

9.

சிவா சோதனைக்குப் படிக்காமல் __________ அவனால் சிறந்த புள்ளிகளைப் பெற முடியவில்லை.

a)

காது குத்தியதால்

b)

முட்டு

க்கட்டையானதால்

c)

தட்டிக் கழித்ததால்

d)

மனப்பால் குடித்ததால்

10.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்

a)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஆர் எனின்

b)

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

c)

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

d)

தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அஞ்சப் படும்

11.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


இன்று முகிலன் புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லை. __________________ நாளை கண்டிப்பாக அழைத்து வருவேன்.

a)

ஆயினும்

b)

ஏனென்றால்

c)

ஏனெனில்

d)

இன்னும்

12.

கீழ்க்காணும் எழுத்துப் பட்டியல் எதைக் குறிக்கின்றது?


அ, இ , உ

a)

வினா எழுத்து

b)

மெய் எழுத்து

c)

நெட்டெழுத்து

d)

சுட்டெழுத்து

13.

வாக்கியத்தில் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வேற்றுமை உருபு சொற்களைத் தெரிவு செய்க.


_______________ நேற்று _________________ நிறைய _______________ பிடித்தார்.

a)

மீனவர், ஆறு, மீன்களைப்

b)

மீனவரது, ஆற்றை, மீனைப்

c)

மீனவர், ஆற்றில், மீன்களைப்

d)

மீனவரின், ஆற்றில், மீனுக்குப்

14.

கொடுக்கப்பட்ட வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?


மன்னா! நீதி தவறாத உமது ஆட்சி உலகெங்கும் புகழ்பெற எமது வாழ்த்துகள்.

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

15.

கீழ்க்காண்பனவற்றுக்குப் பொருத்தமான இலக்கண விதியைத் தெரிவு செய்க.


ஓடி + தாண்டினான் = ஓடித் தாண்டினான்

a)

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.

b)

வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

c)

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.

d)

நான்காம் வேற்றுமை உருபு (கு)க்குப் பின் வலிமிகும்.

16.

வினையடையைக் குறிக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.

b)

வானில் பருந்து பறந்து சென்றது

c)

மங்கை பெரியவரிடம் பண்பாகப் பேசினாள்.

d)

அழகான மயில் ஒன்று தோகையை விரித்து ஆடியது.

17.

ஐயோ! கால் வலிக்கிறதே!

மேற்காணும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

18.

சரியான எச்சத்தைத் தெரிவு செய்க


தேடி அலைந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

19.

இசைக் கச்சேரியில் மங்கை பாடிய பாடல் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது.


ஏற்ற வேற்றுமை உருபைத் தேர்ந்தெடு

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

ஆறாம் வேற்றுமை

20.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

கோவிட் பெருந்தொற்று காரணமாக விடுமுறையில் இருந்த மாணவர்கள் புலனத்தில் கொடுக்கப்பட்ட பாடங்களைக் கவனமாகச் செய்தனர்.

a)

கோவிட் பெருந்தொற்று

b)

விடுமுறை

c)

மாணவர்கள்

d)

கவனம்