wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணப் புதிர் 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயரைத் தெரிவு செய்க.

மகாகவி பாரதியார் தமிழின்பால் பற்றுக் கொண்டு சொற்சுவை, பொருட்சுவை நிறைந்த பாடல்களை எழுத்துலகிற்குத் தந்துள்ளார்.

a)

தமிழின்பால்

b)

எழுத்துலகிற்கு

c)

பற்று

d)

சொற்சுவை

2.

சரியான யகர உடம்படுமெய் வகையில் புணர்ந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

கண் + இமை = கண்ணிமை

b)

கூலி + ஆள் = கூலியாள்

c)

பூ + அரும்பு = பூவரும்பு

d)

மெய் + அடி = மெய்யடி

3.

மேற்க்காணும் வாக்கியத்தில் சரியான வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க

a)

I , II

b)

II , III

c)

II , IV

d)

III , IV

4.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வலிமிகும் விதிகளில் பிழையானதைத் தெரிவு செய்க.

a)

அந்த, இந்த, எந்த என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

b)

இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)க்குப் பின் வலிமிகும்.

c)

அது, இது, இவை என்னும் சுட்டுப்பெயர்களின் பின் வலிமிகும்.

d)

அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களுக்குப் பின் வலிமிகும்.

5.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

I , III, IV

b)

I, II, IV

c)

I, II, III

d)

II, III, IV

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற சரியான விதியைத் தெரிவு செய்க.

கொண்டு சென்றான்

a)

வன்தொடர்க் குற்றியலுகரத்திற்குப் பின் வலிமிகும்.

b)

ந்து, ண்டு, ய்து, என்று முடியும் வினையெச்சங்களின் பின் வலிமிகாது.

c)

அகர, இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகாது.

d)

வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது.

7.

கீழ்க்காண்பனவற்றுள் எது கிரந்த எழுத்தை ஏற்று வரும் வாக்கியம்?

a)

நாங்கள் ஐப்பசி மாதத்தில் வீடு மாறினோம்.

b)

கோவிலில் ஐயர் தமிழில் மந்திரம் ஓதினார்.

c)

ஶ்ரீ தேவி இறைவனுக்கு மாலை தொடுத்தாள்.

d)

தீயனைப்பு வீரர்கள் ஐந்தடி நீளமுள்ள ஸர்ப்பத்தை பிடித்தனர்

8.

X கட்டத்தில் இருக்க வேண்டிய வினைமுற்றைத் தெரிவு செய்க.

a)

மேய்ந்தது

b)

ஓடினர்

c)

பாடினேன்

d)

பறக்கின்றன

9.

கீழ்க்காணும் கூற்றில் கோடிட்ட சொல்லுக்கு ஏற்ற இடம் எது?

"நம் எல்லோரையும் முத்து திடலுக்கு வரச்சொன்னான்", என்றான் செல்வம்.

a)

தன்மை , முன்னிலை

b)

படர்க்கை, முன்னிலை

c)

தன்மை, படர்க்கை

d)

முன்னிலை, படர்க்கை

10.

செய்வினைக்கு ஏற்ற சரியான செயப்பாட்டுவினையைத் தெரிவு செய்க.


தம்பி பட்டம் செய்தான்.

a)

தம்பி செய்த பட்டம்.

b)

பட்டத்தைத் தம்பி செய்தான்.

c)

செய்யப்பட்டதால் தம்பி பட்டம்.

d)

பட்டம் தம்பியால் செய்யப்பட்டது.

11.

நெடில் உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல் வரிசையைத் தெரிவு செய்க.

a)

ஆவாரம், ஐவர், ஏலக்காய்

b)

மஞ்சள், மல்லிகை, பப்பாளி

c)

ஆரஞ்சு, ஆப்பிள், துளசி

d)

குமுட்டி, தேன், அல்லி

12.

கவிதா ____________ வாங்கிய கைக்கடிகாரம் ஒன்றைத் ______________ தங்கைக்கு அணிவித்தாள்.

a)

தாம் , தன்

b)

தான் , தன்

c)

தான் , தம்

d)

தாம், தம்

13.

பெயரடை ஏற்று வந்துள்ள வாக்கியத்தை தெரிவு செய்க

a)

அமுதா கட்டியிருந்த அழகான புடவை அனைவரையும் கவர்ந்தது .

b)

செல்வன் உதைத்த பந்து உயரமாகச் சென்றது .

c)

திரு.குமார் வரைந்த ஓவியம் சிற்றப்பாக இருந்தது .

d)

ஆசிரியர் மாணவர்களுக்குக் கூறிய கதை ஈர்ப்புடன் இருந்தது.

14.

கீழ்க்காணும் வாக்கியத்தில் அடிக்கோடிட்ட சொல் குறிக்கும் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க


பாரதியார் தமிழின்பால் கொண்ட பற்றால் ஞானம் பெற்ற கவிஞனாகத் தம்மை உலகிற்கு வெளிக்காட்டினார் .

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

15.

இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.

யாழினி அரிசி மூட்டையைத் தம் தோளில் சுமந்து சென்றாள்.

a)

மூட்டையைத்

b)

சுமந்து

c)

தோளில் .

d)

தம்