WorksheetsPT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் மிகப் பொருத்தமான இரட்டைக்கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மேலதிகாரியின் அறைக்குள் நுழைவதற்கு முன், பவித்ரன் கதவைக் கிடுகிடுவெனத் தட்டினான்.
வீட்டுப்படியில் சடசடவென ஓடிவந்த நகுலன் கால் தடுமாறிக் கீழே விழுந்தான்.
பெருநாள் காலங்களில் இலாபம் ஈட்ட நினைக்கும் சில வியாபாரிகள் பொருள்களின் விலையைக் கடகடவென ஏற்றி வைத்துள்ளனர்.
காவலாளியிடம் மாட்டிக்கொண்ட திருடன் திருதிருவென விழித்தான்.
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.
தாயார் வீட்டுக்குத் திரும்புவதற்கு முன்னரே தனக்குத் தெரிந்த சமையலை _____ செய்து முடித்தாள் கீதா.
கிடுகிடுவென
நசநசவென
பரபரவென
கடகடவென
கீழ்க்காணும் இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
கிடுகிடு
விரைவாகச் செய்தல்
அதிர்வு
பயத்தினால் நடுங்குதல்
கடுமையான ஓசை
ஏற்ற இணைமொழியைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.
தான் தொடங்கவிருக்கும் வியாபாரத்தில் எந்த ________ நிகழாமல் இருப்பதைக் குமார் உறுதிசெய்து கொண்டான்.
தங்கு தடையும்
உயர்வு தாழ்வும்
சீரும் சிறப்பும்
கள்ளங் கபடும்
பொருத்தமான இணைமொழியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆசிரியர் தயாளன், தம்மிடம் பயிலும் அனைத்து மாணவர்களிடம் எவ்வித உயர்வு தாழ்வு பார்க்காமல் பாடம் போதிப்பார்.
குமார் எப்போதும் கள்ளங்கபடு கொண்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
மாணவர்கள் அனைவரும் பள்ளியின் தலைமையாசிரியரின் அறிவுரையைக் கேட்டு நாணிக் கோணினர்.
நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தன் மகனின் நிலையைக் கண்ட அந்த அம்மையார் வாடி வதங்கினார்.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் ஏற்ற இணைமொழியைக் கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.
நாம் ______ திடமான கொள்கையும் விடாத முயற்சியும் கொண்டிருந்தால் வெற்றி உறுதி.
அகமும் புறமும்
உள்ளும் புறமும்
அடக்க ஒடுக்கத்தில்
உயர்வு தாழ்வில்
சரியான உவமைத் தொடரையும் பொருளையும் கொண்ட இணையைத் தெரிவு செய்க.
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல – இனிப்புக்கு மேல் இனிப்பு
நுனிப்புல் மேய்ந்தாற் போல – ஒன்றைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளுதல்.
அழகுக்கு அழகு செய்வது போல – அழகான பெண்ணை மேலும் அழகு செய்தல்.
வேலியே பயிரை மேய்ந்தாற் போல – காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்.
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
* இராஜன் பணக்காரர் குடும்பத்தில் பிறந்தவன்.
* மூத்த மகன் – உயர்கல்வி கற்றவன்.
* சொத்துகள் அனைத்தும் தனக்கே கிடைக்கும் என எதிர்பார்த்தான்.
* பெற்றோர் இளைய மகளுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டதால் ஏமாற்றம் அடைந்தான்.
இலவு காத்த கிளிபோல
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
இலைமறை காய் போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
கீழ்க்காணும் வாக்கியம் உணர்த்தும் கருத்துக்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
தமயந்தி ஆண்டு தொடக்கத்திலிருந்து கருத்தூன்றிப் பயின்றாள். ஆசிரியர் கொடுத்த பயிற்சிகளை முறையாகச் செய்தாள். தேர்வில் அனைத்துக் கேள்விகளும் அவளுக்கு மிக எளிதாக இருந்தன.
தாயைக் கண்ட சேயைப் போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
ஊமை கண்ட கனாப் போல
இலைமறை காய் போல
கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் மருந்துகளையும் உணவுப் பொருள்களையும் அனுப்பி உதவி செய்தது.
ஊண் உறக்கம்
தோள் கொடுத்தல்
உச்சி குளிர்தல்
ஏட்டிக்குப் போட்டி
