NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும் 4 -உவமைத்தொடர்.
Total questions: 10
Worksheet time: 5mins
கணவன் இறந்த செய்தி கேட்ட கண்ணகி ___________ சாய்ந்தாள்.
a. அடியற்ற மரம் போல
b. நகமும் சதையும் போல
c. நுனிப்புல் மேய்ந்தாற்போல
பால் காய்ச்சும்போது தவறுதலாக கையில் ஊற்றிக்கொண்ட சரளா,______ வலியால் துடித்தாள்.
a. நகமும் சதையும் போல
b. அனலில் இட்ட மெழுகு போல
c. நீறு பூத்த நெருப்புப் போல
அந்தத் திரைப்படத்தில் ஒரு சில மர்மங்களை இயக்குநர் ____ காட்டியிருக்கிறார்.
a. தாயைக் கண்ட சேயைப் போல
b. இலை மறை காய் போல
c. பசுத்தோல் போர்த்திய புலி போல
உடன் பிறவாதவர்களான இரகுவும் அவன் நண்பர்களும்_____ ஒற்றுமையுடன் பழகி வந்தனர்.
a. எலியும் பூனையும் போல
b. நகமும் சதையும் போல
c. ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல.
தாய் தன் குழந்தைகளைக்_________ப் பார்த்துக் கொணடார்.
a. கரைக் காணாக் கப்பல் போல
b. கண்ணினைக் காக்கும் இமை போல
c. நீறு பூத்த நெருப்புப் போல
சில நேரங்களில், உண்மையை விட வதந்திகள் ________ பரவுவதை நாம் உணர முடியும்.
a. நீறு பூத்த நெருப்புப் போல
b. வெயிலில் இட்ட புழு போல
c. காட்டுத்தீ போல
மல்லிகா படித்திருந்தாலும், ______ அறியாமையுடன் இருந்தாள்.
a. கிணற்றுத் தவளை போல
b. சூரியனைக் கண்ட பனி போல
c. நீர்மேல் எழுத்துப் போல
கவியும் பாரதியும் _________எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள்.
a. பசுத்தோல் போர்த்திய புலி போல
b. கீரியும் பாம்பும் போல
c. சூரியனைக் கண்ட பனி போல
கர்ணனின் கொடையுள்ளம் __________ அனைவரின் உள்ளத்திலும் பிரகாசித்தது.
a. வெயிலில் இட்ட புழு போல
b. தாயைக் கண்ட சேயைப் போல
c. குன்றின் மேலிட்ட விளக்குப் போல
____ துன்பமெல்லாம் விலக வேண்டும் என்று மாதவி கடவுளை வேண்டினாள்.
a. நீர்மேல் எழுத்துப் போல
b. சூரியனைக் கண்ட பனி போல
c. பசுமரத்தாணி போல
