wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுளும் மொழியணியும் 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் பொருளுக்கேற்ற கொன்றைவேந்தன் தெரிவு செய்ய

மிகச் சிறிய செயலாக இருப்பினும் நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே அதனை மேற்கொள்ள வேண்டும்

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

நுண்ணிய கருமம் எண்ணித் துணிக

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

2.

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்.

கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?

a)

நன்மைகள்

b)

தீய செயல்கள்

c)

உதவிகள்

d)

தவறுகள்

3.

கீழ்க்காணும் உலக நீதியை நிறைவு செய்க.

…………………. புறம் சொல்லித் திரிய வேண்டாம்.

a)

போகாதே

b)

பொல்லாங்கு

c)

போக விட்டு

d)

வஞ்சனைகள்

4.

கீழ்க்கண்டவற்றுள் எது உலகநீதி அல்ல?

a)

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

b)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

d)

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

5.

கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உலகநீதி யாது?

a)

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

b)

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

c)

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

d)

வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

6.

கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.

----------------------------------------------------------------

நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே

a)

நூறாண்டு பழகினும் கேண்மை

b)

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

c)

பழகினும் மூர்க்கர் கேண்மை

d)

ஓராண்டு பழகினோம்

7.

கீழ்க்காணும் உலகநீதி க்கு ஏற்ற கொன்றைவேந்தன் யாது?

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் .

a)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

b)

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

c)

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

8.

கொடுக்கப்பட்டுள்ள வெற்றி வேற்கையில் கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு பொருத்தமான வேறு சொல் எது?

கல்விக்கு அழகு கசடற மொழிதல்.

a)

சரியாக

b)

முறையாக

c)

பிழையின்றி

d)

பிழையாக

9.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.

என் குடும்பம் வறுமையில் வாடிய சமையத்தில் எனக்குக் கல்வியைத் தொடர விருப்பம் இல்லாமல் போனது. ஆனால் ------------------ என்று என் ஆசிரியர் கூறியதே இன்று என்னைக் கற்றோன் ஆக்கியுள்ளது.

a)

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

எழுத்தறிவித்தவன் இறைவனாகும்

d)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

10.

கோடிட்ட இடத்தில் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

வளவன்: இன்று உங்கள் மைத்துனரின் திருமணம் ஆயிற்றே. நீங்கள் செல்லவில்லையா?

குமரன்: அவர் மிகவும் கர்வம் பிடித்தவன். அதனால், எனக்குப் போக விருப்பமில்லை.

வளவன்: அப்படிச் சொல்லாதீர்கள் குமரன். -------------- நாம் அனைவரிடமும் அன்பாக இருந்தால் தான் நமக்குப் பல உறவினர்களும் நண்பர்களும் இருப்பார்கள்.

a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

ஏவா மக்கள் மூவா மருந்து.

d)

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை