Font size
Worksheetsவேற்றுமை உருபுகள்
Total questions: 10
Worksheet time: 5mins
கருமையாக்கப்பட்ட பெயர்ச் சொல்லின் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
இனியன் பள்ளியிலிருந்து வீட்டிற்குப் புறப்பட்டான்.
இரண்டாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க
இன்
இருந்து
அது
நின்று
எட்டாம் வேற்றுமை உருபுகளைத் தாங்கி வரும் பெயர்ச் சொற்களைத் தெரிவு செய்க.
கவிலா!
தம்பி
யாழினி!
குமரா!
கருமையாக்கப்பட்ட பெயர்ச் சொல்லிற்கு ஏற்ற வேற்றுமை உருபின் வகையைத் தெரிவு செய்க.
தனஞ்செயனுடைய தமிழ்மொழி பாடப் புத்தகம் நகுலனிடம் உள்ளது.
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
வண்ணமிடப்பட்ட சொல்லிற்கு ஏற்று வரும் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
அப்பா மருத்துவமனை வேலை செய்கிறார்.
கு
இல்
இன்
உருபு இல்லை
சரியான வேற்றுமை உருபுகள் ஏற்று வந்துள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.
மாணவர்கள் நூலகத்தின் படிக்கிறார்கள்.
திரு. கந்தமாறன் தினமும் மகிழுந்தில் அலுவலகம் செல்வார்.
காவியா! அங்குச் செல்லாதே!
சுந்தரனின் கன்னங்கள் சிவந்தன.
ஏழாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க.
இல்
இடம்
உடைய
கண்
விடுபட்ட இடத்தில் சரியான சொல்லைத் தெரிவு செய்க.
பார்வதி அம்மையார் ____________ அழுத திருஞானசம்பந்தருக்குப் பால் ஊட்டினார்.
பசியில்
பசியால்
பசியோடு
பசியுடன்
அது, உடைய உருபுகள் எத்தனையாவது வேற்றுமை உருபு வகையைச் சேர்ந்தது?
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
கோடிட்ட சொல்லிற்கு ஏற்ற வேற்றுமை உருபின் வகையைத் தெரிவு செய்க.
குகனிடம் இருந்த நற்குணங்களைக் கண்டு அவனுடைய பெற்றோர் உச்சிக் குளிர்ந்தனர்.
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
ஏழாம் வேற்றுமை
எட்டாம் வேற்றுமை
