NEW
Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம் -பாக்யா 19
Total questions: 12
Worksheet time: 6mins
கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருத்து யாரைப்பற்றியது?
வள்ளலார்
திருவள்ளுவர்
புலவர்
மன்னர்
திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து...
நமது மொழி பழமைவாய்ந்தது என அறியலாம்
நமது புலவர் பழமைவாய்ந்தவர் என அறியலாம்
நமது நாடு பழமைவாய்ந்தது என அறியலாம்
நமது அரசு பழமைவாய்ந்தது என அறியலாம்
திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவைகளில் தவறானது:
தெய்வப்புலவர்
செந்நாப்போதர்
பெருநாவலர்
தேவரிஷி
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்று கூறியவர்...
பாரதிதாசன்
பாரதியார்
கம்பர்
கபிலர்
மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை:
ஞான வெட்டியான் மற்றும் பஞ்ச ரத்னம் என்பர். காரணம் ...
திருவள்ளுவர் ஒரு சித்தரும் ஆவார்
திருவள்ளுவர் ஒரு மருத்துவரும் ஆவார்
திருவள்ளுவர் ஒரு நாவலரும் ஆவார்
சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன. அதனால்தான் ...
திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்கிறோம்
திருவள்ளுவரை புலவர் என்கிறோம்
திருவள்ளுவரை ஆசான் என்கிறோம்
திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.[9] திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். சைவர் என்றால்...
திருமாலை வணங்குபவர்
சிவனை வணங்குபவர்
சூரியனை வணங்குபவர்
முருகனை வணங்குபவர்
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும், ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன. திருமகள் என்பவர்..
சரஸ்வதி தேவி
இலட்சுமி தேவி
பார்வதி
சக்தி
ரிக் வேதத்தில் இந்திரனைப் பற்றிய குறிப்பும், ஆரியர்கள், தமிழகம் நுழைந்த பிறகு, இந்திரனைப் பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர், திருக்குறளை, ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும். எத்தனை வேதங்கள் நமது முக்கிய வேதங்களாக கருதப்படுகின்றது?
2
3
4
12
பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் ........................... அழைக்கப்படுகிறது.
சைவநூல்
திருவாசகம்
திருக்குறள்
திருமந்திரம்
1812 இல் முதன்முதலாக திருக்குறள் அச்சிடப்பட்டது. எது இதன் தவறான பெயராகும்?
பொதுமறை
முப்பால்
வான்மறை
உலகமொழி
திருக்குறள் அறம், ..............., இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது.
செல்வம்
பொருள்
கர்மம்
புகழ்
