NEW
Font size
Worksheetsபுதிர்ப்போட்டி படிநிலை 2
Total questions: 20
Worksheet time: 7mins
ஐம்பொறி ஆட்சிகொள்
'ஐம்பொறி' என்ற சொல்லுக்குப் பொருந்தாத சொல் யாது?
மூக்கு
காது
கால்
கண்
காலியிடத்திற்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஜப்பானியர் ஆட்சியில் சயாம் மரண இரயில் தண்டவாளத்தைக் கட்டுவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள் .............................. இன்றி துன்புறுத்தப்பட்டனர்.
ஈவிரக்கம்
ஆணித்தரம்
திட்ட வட்டம்
எடுப்பார் கைப்பிள்ளை
கீழ்க்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்.......
............கருமமே கண்ணாயி னார்.
ஔவையார்
குமரகுருபர சுவாமிகள்
உலகநாத பண்டிதர்
சிவப்பிரகாச சுவாமிகள்
கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.
கூனி : நாளை இராமனுக்கு முடிசூட்டுவிழாவா? அதை எப்படியாவது நிறுத்துவேன்.
கைகேயி: அம்மா... உங்களுக்கு ஏன் இராமன் மீது அவ்வளவு பொறாமை? ______________________ என்பதை மறந்து விட்டீர்களா?
ஆறுவது சினம்
ஏற்ப திகழ்ச்சி
ஈவது விலக்கேல்
ஔவியம் பேசேல்
நுண்ணிய கருமமும் எண்ணித் துணி
மிகச்சிறிய செயல் என்று எண்ணி துணிந்து செய்ய வேண்டும்
மிகச்சிறிய செயலாக இருப்பினும் திட்டமிட்டு செய்தல் வேண்டும்
மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு ஆராய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்
மிகச்சிறிய செயலாக இருப்பினும் அதனை நன்கு துணிந்து செய்ய வேண்டும்
"அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் இராஜா!..நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு இராஜா!..." எனும் பாடல் வரிக்குப் பொருத்தமான புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
உடலினை உ றுதி செய்
ஏறுபோல் நட
இளைத்தல் இகழ்ச்சி
ஓய்தல் ஒழி
மாவட்ட அதிகாரிகள் மக்கள் நலத் திட்டங்களை விரைவில் செய்யாது காலந்தாழ்த்தியதால் அக்கிராம மக்கள் கோபமுற்றனர்.
ஆறப் போடுதல்
அள்ளி விடுதல்
கம்பி நீட்டுதல்
அரக்கப் பறக்க
சரியான இணையைத் தெரிவு செய்க.
ஐயம் புகினும் செய்வன செய் - வறுமை ஏற்படும் வரையிலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - மற்றவரின் குறைகளைப் பெரிதுபடுத்தினால் உறவினரும் நண்பர்களும் நம்மை விரும்புவார்கள்.
சூதும் வாதும் வேதனை செய்யும் - சூதாடுதலும் வாக்குவாதம் செய்தலும் பிறரைத் துன்புறுத்தும் செயல்களாகும்.
ஏவா மக்கள் மூவா மருந்து - சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
அமுதன் மேல் கோபம் கொண்ட முத்து, தன் பற்களை ______________வெனக் கடித்துக் கொண்டே அவனைத் தாக்கினான்.
கடுகடு
தரதர
நறநற
குடுகுடு
தவறான இணையைத் தெரிவு செய்க.
மனக்கோட்டை - வெறும் கற்பனை
தொன்று தொட்டு - நீண்ட காலம் / பழையக் காலம்
ஏட்டுச் சுரைக்காய் - நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி
அரக்கப் பரக்க - அவசரமும் பதற்றமும்
"குமரனும் கோகுலனும் எப்பொழுதும் _____________________________________ சண்டையிட்டுக் கொள்கின்றனர்" என திருமதி கமலா தலைமையாசிரியரிடம் புகார் செய்தார்.
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
காட்டுத் தீ போல
எலியும் பூனையும் போல
சரியான மரபுத்தொடர் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஏராளமான குறட்பாக்களை மனக்கோட்டை கட்டிய வேணி போட்டியில் பரிசு பெற்றாள்.
தான் கண்ட சிறிய பாம்பைப் பற்றி தன் நண்பனிடம் பெரிதாக அள்ளி இறைத்தான்.
வெகுநாட்களுக்கு முன்பு ஆறப் போட்ட திட்டம் இப்பொழுது வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது
முதலாளி, திறமையான தொழிலாளிகளைத் தேர்ந்தெடுக்க வெளுத்து வாங்கினார்.
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
அழுக்காறு அவாவெகுளி ________________________ நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
இன்னாச்சொல் - இனிமையற்ற சொல்
இன்னாச்சொல் - இன்பம் தரும் சொல்
இன்னாச்சொல் - கடுஞ்சொல்
இன்னாச்சொல் - தகாதச்சொல்
கீழ்க்காணும் மொழியணிக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
'காந்தம் இரும்பைக் கவர்வது போல'
திரு.தேனமுதன் குடும்பத்தில் உள்ள அனைவரும் பண்டிகை நாளில் புத்தாடைகளையும் நகைகளையும் அணிந்து மகிழ்ச்சியாக இருந்தனர்.
மலை பிரதேசத்தில் சாலைகள் சமமற்ற நிலப்பகுதியாக இருந்ததால் வாகன ஓட்டுனர்கள் மெதுவாக வாகனத்தைச் செலுத்தினர்.
நம் நாட்டில் உள்ள பல்வகை உணவு முறைகள் சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது.
எல்லாத் திசைகளிலிருந்து வந்த பட்டாசு வெடிக்கும் சத்தம் என் உறக்கத்தைக் கெடுத்தது.
கண்மனி தன் வீட்டின் அறைக்கதவை யாரோ ____________________________ தட்டுவதைக் கேட்டுப் பயந்தாள்.
தடதடவென
மடமடவென
தகதகவென
சரசரவென
______________ ________________ ________________ ____________________ தெய்வத்துள் வைக்கப் படும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
வேண்டுதல் வேண்டாமை இலானடி
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
'ஒரு குழந்தை சிறு வயதிலே எப்படிச் செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்'
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
இளங்கன்று பயம் அறியாது
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
அந்த மலை ஓரத்தில் உள்ள ஆற்று நீர் __________________வென ஓடியது.
சரசர
மடமட
சலசல
பளபள
"மாணவர்களே, இணையப் பயன்பாட்டின் _______________________ அறிந்து நாம் விவேகமாக செயல்பட வேண்டும்"என்று ஆசிரியர் அறிவுரைக் கூறினார்
அருமை பெருமை
பழக்க வழக்கம்
ஒளிவு மறைவு
நன்மை தீமை
