NEW
Font size
Worksheetsகூடுதல் மொழிப்பயிற்சி 1
Total questions: 20
Worksheet time: 10mins
கடையில் விலையுயர்ந்த பையைத் களவாட எண்ணிய பாலாவை ராமு ___________ நிறுத்தினான்.
தோன்றி
தென்பட்டு
தடுத்து
தொலைத்து
பேருந்தில் செல்லும்போது அம்மா என்னிடம் கம்பியை ________ பிடித்துக்கொள்ள சொன்னார்.
தளர்த்தி
இறுக
பொருத்தி
தள்ளி
நாம் தீய பழக்கங்களை ______________ நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
நழுவவிட்டு
தளரவிட்டு
வளரவிட்டு
விட்டுவிட்டு
மாலா வீட்டுச் சுவரில் ஆணியை __________ அதை அடிக்க ஆரம்பித்தாள்.
அழுத்தி
தொலைத்து
சுழற்றி
மூடி
பெற்றோர் கூறிய அறிவுரையைப் பிடிவாதம் குணம் _________ ரவி பொருள்படுத்தவில்லை.
மிகுந்த
தணிந்த
படர்ந்த
அடைந்த
நான் ஆசிரியரிடம் என்னுடைய ____________ கொடுத்தேன்.
ஒப்படைப்பிலிருந்து
ஒப்படைப்புக்கு
ஒப்படைப்பை
ஒப்படைப்பில்
அடுக்குமாடி கட்டடத்ததின் கீழ் இருந்த இளையர்கள் சத்தம் போட்டுக்கொண்டிருந்ததால் மக்கள் _____________ புகார் செய்தார்கள்.
காவலர்களிடம்
காவலர்களிடமிருந்து
காவலர்களை
காவலர்களுக்கு
நான் _____________ அனுமதி பெற்ற பிறகு பூங்காவுக்கு விளையாட சென்றேன்.
அம்மாவுக்கு
அம்மாவால்
அம்மாவிடமிருந்து
அம்மாவுடன்
அன்பன் தனக்குக் கிடைத்த பிறந்தநாள் ___________ ஒன்றை எடுத்து தம்பியிடம் தந்தான்.
பரிசுகளை
பரிசுகளின்
பரிசுகளுக்கு
பரிசுகளில்
___________ தேவைகளை அறிந்து அரசாங்கம் அவர்களுக்கு நிதியுதவி வழங்கி வருகிறது.
மக்களின்
மக்களுக்கு
மக்களை
மக்களால்
ஆக்கப் பொறுத்தவன் _______ பொறுக்க வேண்டும்.
ஆளப்
ஆறப்
ஆடப்
ஆகப்
சொல்லுக சொல்லிற் __________ சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
சொந்தமுடைய
கடுமையுடைய
பொருளுடைய
பயனுடைய
நுண்ணிய ________ எண்ணித் துணிக.
செயலும்
காரியமும்
கருமமும்
திட்டமும்
__________ இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
பணிவுடையன்
குணமுடையன்
வளமுடையன்
அறமுடையன்
________ எழுத்து இகழேல்
எண்
சொல்
தொடர்
மொழி
மாலையில் ___________ மழையைப் பாலா கண்டு ரசித்தான்.
பொலிந்த
பொழிந்த
மேடையில் அழகாக பாடிய சிறுவர்களுக்கு நடுவர்கள் சான்றிதழ்கள் ____________.
அழித்தார்கள்
அளித்தார்கள்
பூமியில் ஏற்படும் மாற்றங்களை __________ நாம் பூமியைப் பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.
அரிந்து
அறிந்து
ராமு தன்னிடம் இருந்த __________ பாடக்குறிப்புகளையும் தனது தங்கையிடம் கொடுத்தான்.
அனைத்து
அணைத்து
இனியனுக்குப் பாடத்தில் ஐயம் ஏற்பட்டதால் ஆசிரியர் அதை மீண்டும் _________ கூறினார்.
விளக்கி
விலக்கி
