wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

18.8.2020

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கிராமத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், கட்டப்பட்டிருந்த அணை உடைந்து ஊருக்குள் ________________ புகுந்தது.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

2.

அன்று அப்பாவின் பிறந்தநாள். அம்மா அவருக்கு மிகவும் பிடித்த _______________ மீன் கறி சமைத்தார்.

a)

வாழை

b)

வாளை

3.

இளம் வயதில் கார்த்திக் அயராது உழைத்தார். அதனால் முதுமையில் அவர் ________________ ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தார்.

a)

குறை

b)

குரை

4.

வெப்பம் அதிகமாக இருந்ததால் மாலாவுக்குத் தாகமாக இருந்தது. அவள் இளநீர் அருந்தித் தன் தாகத்தை __________ கொண்டாள்.

a)

தணித்து

b)

தனித்து

5.

தேர்வுகள் அனைத்தும் முடிந்ததால் சோமு தன் _______________ அனுமதியோடு

நண்பர்களுடன் படம் பார்க்கச் சென்றான்.

a)

பெற்றோருடன்

b)

பெற்றோரின்

6.

வேலையை இழந்த நித்திலாவின் அப்பா மன ___________________ அவதியுற்றார்.

a)

உளைச்சலால்

b)

உளைச்சலுக்கு

7.

தாய்ப் பறவை _______________ இருந்த தன் குஞ்சுகளுக்கு இரை தேடச்

சென்றது.

a)

பசியின்

b)

பசியோடு

8.

பெற்றோர் சிறு வயதிலிருந்தே தம் ________________ நல்ல பண்புகளைக்

கற்றுக்கொடுப்பது அவசியமாகும்.

a)

பிள்ளைகளிடம்

b)

பிள்ளைகளுக்கு

9.

அன்னை தெரேசா ஏழை________________ கனிவாகப் பேசும் தன்மை கொண்டவர்

என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாகும்.

a)

எளியவர்களிடம்

b)

எளியவர்களை

10.

வலையில் _________________ அனைத்துப் பறவைகளும் வலையையே தூக்கிக்கொண்டு பறந்தன.

a)

சிக்கும்

b)

சிக்கிய

11.

குற்றம் ஒன்றும் ___________ திரிய வேண்டாம்.

a)

சொல்லி

b)

பாராட்டி

c)

பேசி

d)

சீராட்டி

12.

நேசத்தோடு _____________ வாழ்.

a)

ஒத்து

b)

சேர்ந்து

c)

போற்றி

d)

கூடி

13.

ஆழம் ___________ காலை இடாதே.

a)

அறியாமல்

b)

பார்க்காமல்

c)

தெரியாமல்

d)

இல்லாமல்

14.

கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது ___________________.

a)

வானளவு

b)

விண்ணளவு

c)

கடலளவு

d)

உலகளவு

15.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் ___________.

a)

மருந்து

b)

விருந்து

c)

அன்பு

d)

மதிப்பு

16.

நிழலின் அருமை ________ தெரியும்.

a)

மழையில்

b)

வெயிலில்

c)

காற்றில்

d)

பகலில்

17.

மின்னுவதெல்லாம் _______________________அல்ல.

a)

தங்கம்

b)

வைரம்

c)

பொன்

d)

முத்து

18.

காலத்தினாற் செய்த _________ சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.

a)

காரியம்

b)

தொண்டு

c)

உதவி

d)

நன்றி

19.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

____________ மறப்பது நன்று.

a)

அப்போதே

b)

இன்றே

c)

அன்றே

d)

இப்போதே

20.

கேடில் விழுச்செல்வம் ___________ ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை.

a)

பதவி

b)

கல்வி

c)

வெற்றி

d)

உதவி