NEW
Font size
S
M
L
XL
WorksheetsP6 Revision 2
Total questions: 15
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
தேசிய தினத்தன்று வண்ண வண்ண _________________
வேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. அவை பெரியவர்களையும்
சிறுவர்களையும் வெகுவாகக் கவர்ந்தன
a)
வான
b)
வாண
2.
அண்டை நாட்டில் வழிப்பறிக்கொள்ளைகள் அதிகரித்துள்ளன.
இப்பிரச்சனையை _________________ அந்நாட்டின் அரசாங்கம் பல முயற்சிகளைச் செய்து வருகிறது.
a)
ஒலிக்க
b)
ஒழிக்க
3.
சரவணன் தோட்டத்தில் உலாவியபோது, ஒரு _________________
அவன் கையைக் கொட்டிவிட்டது. அதனால் அவனது கை
வீங்கியது.
a)
குளவி
b)
குழவி
4.
இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் பழங்காலத்துக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் _________________ வடிவங்கள் தமிழ் எழுத்துகள் என்று ஆய்வாளர்கள் கூறினர்.
a)
பொரிக்கப்பட்டுள்ள
b)
பொறிக்கப்பட்டுள்ள
5.
என் தாயாருக்கு நாற்பது வயதாகிவிட்டது. அவருடைய தலையில் ஆங்காங்கே _____________ முடியைக் காணலாம்.
a)
நரை
b)
நறை
6.
செல்வி கூடையில் வாங்கி வந்த அரிசி கைதவறிக் கீழே
கொட்டியது. அவள் அதை_______________கூடையில் வைத்தாள்.
a)
அல்லி
b)
அள்ளி
7.
மூதாட்டி பேருந்திலிருந்து இறங்கியபோது வழுக்கிக் கீழே
விழுந்தார். அவரைச் சோதித்த மருத்துவர் அவருடைய
_______________முறிந்திருப்பதாகக் கூறினார்.
a)
விலா
b)
விழா
8.
இசை வகுப்பின்போது ராதா வாசித்துக்கொண்டிருந்த வீணையின்______________ அறுந்தது. அதனால், அவளால் தொடர்ந்து வீணையை வாசிக்க முடியவில்லை.
a)
நான்
b)
நாண்
9.
வேடன் மானைக் குறி பார்த்து, ______________ ஒன்றைத் தொடுத்தான். ஆனால், மான் தக்க நேரத்தில் வேகமாக ஓடித் தப்பித்தது.
a)
பானம்
b)
பாணம்
10.
கவனக் குறைவினால் என் பாவாடையில் தேநீர்
பட்டுவிட்டது. பல முறை துவைத்தும் அந்த ___________________ போகவில்லை.
a)
கரை
b)
கறை
11.
அரசன் ________________ தவறாது நடந்துகொண்டால் அந்நாட்டு மக்கள் சிறப்பாக வாழ்வார்கள். இராஜராஜ சோழன் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்.
a)
நெரி
b)
நெறி
12.
வெப்பம் அதிகமாக இருந்ததால் கலாவுக்கு தாகமாக இருந்தது. அவள் இளநீர் அருந்தி தன் தாகத்தை __________ கொண்டாள்.
a)
தனித்து
b)
தணித்து
13.
கிராமத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், கட்டப்பட்டிருந்த அணை உடைந்து ஊருக்குள் ________________ புகுந்தது.
a)
வெள்ளம்
b)
வெல்லம்
14.
இளம் வயதில் கார்த்திக் அயராது உழைத்தார். அதனால் முதுமையில் அவர் ________________ ஒன்றும் இல்லாமல் வாழ்ந்தார்.
a)
குறை
b)
குரை
15.
அன்று அப்பாவின் பிறந்தநாள். அம்மா அவருக்கு மிகவும் பிடித்த _______________ மீன் கறி சமைத்தார்.
a)
வாளை
b)
வாழை
Reset
