wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ண,ன வேறுபாடு

Total questions: 20

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
1. பறவைப்பபூங்காவில் ________________ குளத்தில் நீந்திக்கொண்டிருந்தன. 
a)
அன்னங்கள்
b)
அண்ணங்கள்
2.
நாம் அண்ணன் என்று சொல்லும்போது நாக்கு மேல் _____________ நன்றாகப் பதிகிறது. 
a)
அன்னத்தில்
b)
அண்ணத்தில்
3.
இங்கு _______________ பொருள்களும் மலிவாகக் கிடைக்கின்றன. 
a)
அனைத்து
b)
அணைத்து
4.
தாய் அழும் குழந்தையை _______________ முத்தமிட்டார். 
a)
அனைத்து
b)
அணைத்து
5.
மழைக் காலத்தில் ஆற்றில் அதிகம் தண்ணீர் இருப்பதால் ______________ திறந்துவிடப்படுகிறது. 
a)
அணை
b)
அனை
6.
அரசர் வீரர்களைப் போருக்குச் செல்லும்படி ____________ இட்டார். 
a)
ஆணை
b)
ஆனை
7.
அரசர் ____________ மீது அமர்ந்து நகரைச் சுற்றி வந்தார். 
a)
ஆனை
b)
ஆணை
8.
என் அக்காவுக்கு __________ மாதத்தில் திருமணம் நடந்தது. 
a)
ஆனி
b)
ஆணி
9.
'நான் அவர் கூறுவதை ______________ எதிர்க்கிறேன்!' என்று எதிர்ப்புப் பேச்சாளர் கூறினார். 
a)
ஆணித்தரமாக 
b)
ஆனித்தரமாக 
10.
சுவரில் ___________ அடித்து அம்மா படத்தை மாட்டினார். 
a)
ஆணி
b)
ஆனி
11.
அந்த நிகழ்ச்சி என் மனதில் ______________ப்போல் பதிந்தது. 
a)
பசுமரத்தானி 
b)
பசுமரத்தாணி
12.
_____________ வயது என்ன?
a)
உண்
b)
உன்
13.
நீ சத்துள்ள உணவை __________!
a)
உண்
b)
உன்
14.
புலி ______________ உண்ணும் விலங்கு.
a)
ஊன்
b)
ஊண்
15.
பழ _____________ உடலுக்கு நல்லது. 
a)
ஊன்
b)
ஊண்
16.
பூனை _____________ புலி இனத்தைச் சேர்ந்த ஒரு மிருகம்.  
a)
என்பது 
b)
எண்பது 
17.
என் பாட்டிக்கு வயது __________ ஆகிறது. 
a)
என்பது
b)
எண்பது
18.
_______ பெற்றோர் மிகவும் அன்பானவர்கள்.  
a)
என்
b)
எண்
19.
எனக்கு என் நண்பரின் தொலைபேசி __________ தெரியாது. 
a)
எண்
b)
என்
20.
__________ எழுத்து இகழேல். 
a)
எண்
b)
என்