Worksheetsஉடன்பாட்டுவினை & எதிர்மறைவினை
Total questions: 15
Worksheet time: 8mins
எவை உடன்பாட்டுவினை வாக்கியங்கள்?
காரைக்கால் அம்மையார் இறைவனிடம் கனி வேண்டினார்.
அப்பூதி அடிகள் ஊரில் தண்ணீர் பந்தல் அமைத்தார்.
.திலகவதியாருக்குத் தன் தமையனின் செயல் பிடிக்கவில்லை.
மருள்நீக்கியாருக்குச் சூலை நோய் தீரவில்லை
எவை எதிர்மறைவினை வாக்கியங்கள்?
மாணிக்கவாசகர் திருவாசகம் இயற்றினார்.
கொளதமர் அரண்மனை வாழ்வை ஏற்றுக் கொள்ளவில்லை.
கண்ணப்ப நாயனார் தன் கண்களைக் கொய்து கொடுத்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் தன் இலட்சியத்தைக் கைவிடவில்லை.
எது உடன்பாட்டுவினை?
வந்திலள்
வணங்காள்
பேசாள்
மொழிந்தான்
எது எதிர்மறைவினை?
வென்றான்
துயின்றது
கண்டிலாள்
வீழ்ந்தான்
கீழ்க்காணும் உடன்பாட்டுவினை வாக்கியத்தை எதிர்மறைவினை வாக்கியமாக மாற்றுக.
எழிலரசி பள்ளிக்கு வந்தாள்.
எழிலரசி பள்ளிக்கு வருவாள்.
எழிலரசி பள்ளிக்கு வந்திலள்.
எழிலரசி பள்ளிக்கு வந்துவிட்டாள்.
எழிலரசி பள்ளிக்கு வருகிறாள்
உடன்பாட்டுவினை என்றால் என்ன?
ஒரு செயல் நடைபெறாததைப் பற்றிக் கூறும் வினைச்சொல்.
ஒரு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து அதே பொருளை உணர்த்தும்.
ஒரு செயல் நடைபெறுவதைப் பற்றியும் நடைப்பெற்றதைப் பற்றியும் நடைபெறவிருப்பதைப் பற்றியும் கூறும் வினைச்சொல்.
எதிர்மறைவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
மதியழகி கடைக்குச் சென்றாள்.
மாடுகள் கொட்டகைக்கு வந்தில.
அங்கு நீ என்ன கண்டாய்?
உடன்பாட்டுவினை சொற்களைத் தேர்வு செய்க.
கண்டாய், நடுவாள், செய்தான்
படியேன், வந்தனர், உண்டனர்
கண்டிலாய், நடாள், செய்திலன்
வந்திலது- இதற்கான உடன்பாட்டுவினை யாது?
வரும்
வந்தது
வருகின்றது
வந்துகொண்டிருந்தது
எழுதான் - இதற்கான உடன்பாட்டுவினை யாது?
எழுதினான்
எழுதுகின்றான்
எழுதுவான்
எழுதவில்லை
உடன்பாட்டுவினைக்கு ஏற்ற எதிர்மறை வினையைத் தெரிவு செய்க.
படிப்பான் - படித்திலன்
நடந்தது - நடந்தில
பேசுவான் - பேசான்
பறந்தன - பறந்திலது
உடன்பாட்டுவினை வாக்கியத்தை அடையாளமிடுக
திருமதி வெண்ணிலா செய்தியைத் திறம்பட வாசித்தார்
சந்திரன் அழகான ஓவியம் வரைந்திலன்
கீழ்காணும் வாக்கியத்தின் வகையைத் தெரிவு செய்க.
"அமுதன் பழம் உண்ணவில்லை"
எதிர்மறைவினை
உடன்பாட்டுவினை
பிறவினை
செய்வினை
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான எதிர்மறைவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
என் தங்கை செடி நடுவாள்.
என் தங்கை செடி நடாள்.
என் தங்கை செடி நட்டாள்.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எஃது உடன்பாட்டு வினையைக் குறிக்கும் சொல்லாகும்?
தாரார்
தந்தார்
வாரேன்
படியேன்
