NEW
Font size
S
M
L
XL
Worksheetsபுதிர்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புதிர்களுக்குகேற்ற சரியான விடையை தேர்வு செய்க:
பச்சைக் கோட்டைக்குள்ளே வெள்ளை முத்துக்கள். அது என்ன?
a)
வெண்டைக்காய்
b)
அவரைக்காய்
c)
பூசணிக்காய்
2.
ஒளியில் தொடரும் , இருளில் மறையும். அது என்ன?
a)
காற்று
b)
நிழல்
c)
ஒலி
3.
தண்ணீரில் துள்ளுவான், தரையில் தள்ளாடுவான். அவன் யார்?
a)
மான்
b)
முயல்
c)
மீன்
4.
ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார் ?
a)
தீக்குச்சி
b)
எழுதுகோல்
c)
மை
5.
வெள்ளைப் பெட்டிக்குள் மஞ்சள் தங்கம். அது என்ன?
a)
கிழங்கு
b)
முட்டை
c)
மாம்பழம்
6.
என்னைப் பார்த்தால் உன்னைக் காட்டுவேன். அது என்ன?
a)
முகம்
b)
கை
c)
கண்ணாடி
7.
நான் ஒரு வீட்டு விலங்கு : இலை , தழைகளை உண்பேன் . நான் யார்?
a)
ஆடு
b)
பூனை
c)
புலி
8.
கரும்பே எனக்கு உணவாகும்
கருமை எனது நிறமாகும். நான் யார்?
a)
குரங்கு
b)
யானை
c)
கரடி
9.
கீழே எறிந்தால் மேலே போவான் . அவன் யார்?
a)
பூ
b)
மாலை
c)
பந்து
10.
மரத்திற்கு மரம் தாவுவேன்:
வாழைப்பழம் விரும்பி உண்பேன் . நான் யார்?
a)
மயில்
b)
குரங்கு
c)
பருந்து
Reset
