NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு பயிற்சி - 1
Total questions: 10
Worksheet time: 7mins
கண்ணனின் _______________ உயர்ந்த கைத்தொலைபேசியைக் காணவில்லை. அதனால், அவன் கவலையாக இருக்கிறான்.
விளை
விலை
அந்தச் சிறுமிக்கு மருத்துவமனைக்குச் செல்லும் _______________________ தெரியவில்லை. அதனால், அவன் அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவரிடம் விசாரித்தான்.
வழி
வலி
வளி
அப்பா _____________________ முடிந்து வீடு திரும்பினார். அவர் மிகவும் களைத்துப்போய்க் காணப்பட்டார்.
வேளை
வேலை
நாங்கள் _______________________ பண்ணைக்குச் சென்றோம். அங்கே சாதுவான பிராணிகளைத் தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
விளங்கு
விலங்கு
கட்டடத் தொழிலாளர்கள் _________________ கவசம் அணிந்துகொள்வார்கள். அது வேலையிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.
தலை
தளை
இந்திய ___________________ கைவினைக் கண்காட்சி தேசிய நூலகத்தில் நடைபெற்றது. மாணவர்கள் அதைக் கண்டு பயனடைந்தார்கள்.
களை
கலை
வானம் இருண்டுவிட்டது. இன்னும் சிறிது நேரத்தில் _____________________ பெய்யப் போகிறது.
மழை
மலை
அமுதன் கடிகாரத்தின் ______________________ கேட்டு எழுவான். அதனால், அவன் குறித்த நேரத்தில் பள்ளிக்குச் சென்றுவிடுவான்.
ஒலி
ஒளி
நான் என் பெற்றோருடன் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே __________________ இலையில் உணவு பரிமாறினார்கள்.
வாலை
வாழை
வாளை
குமரன் __________________ மணி நேரத்திற்கு முன்பே பள்ளிக்கு வந்துவிட்டான். அதனால், அவன் கதைப்புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.
அரை
அறை
