wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு (12.7.2020)

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அக்கால அரசர்களுக்குக் காட்டில் வேட்டையாடுவது பொழுதுபோக்காக இருந்தது. அவர்கள் வேட்டையாடுவதற்கு _________ பயன்பட்டது.

a)

பானம்

b)

பாணம்

2.

அம்மா தன் மகனின் பிறந்தநாளுக்காகப் பொங்கல் சமைக்க எண்ணினார். அதனால் ________ வாங்கக் கடைக்குச் சென்றார்.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

3.

திருமதி மாலா தான் பழகும் அனைவரிடத்திலும் _______ கண்டு கொண்டிருந்தார். அதனால், அவரின் நண்பர்களும் உறவினர்களும் அவரிடமிருந்து விலகத் தொடங்கினர்.

a)

குறை

b)

குரை

4.

சிங்கப்பூர் ஒரு _________ மிக்க நாடாகத் திகழ்கிறது. இதற்கு நம் முற்போக்குமிக்க தலைவர்களும் விடாமுயற்சியுடன் செயல்படும் மக்களுமே காரணமாவார்கள்.

a)

வலம்

b)

வளம்

5.

தரையில் பல தாள்கள் குவிந்து கிடந்தன. அவை என்

வழியை _____________, என்னால் விரைவாக நடக்க முடியவில்லை.

a)

மரித்ததால்

b)

மறித்ததால்

6.

நான் அன்னையர் தினத்தன்று அம்மாவிற்கு ஒரு கவிதையை எழுதிக் கொடுத்தேன். அவர் மனம் மகிழ்ந்து, என்னை ____________ முத்தமிட்டார்.

a)

அனைத்து

b)

அணைத்து

7.

மாறுவேடப் போட்டியில் ரஜினிகாந்தின் _________________ பேசிய வருண் வெற்றி பெற்றான். அவனின் திறமையே அவனின் பலமாகியது.

a)

குரலில்

b)

குறளில்

8.

நான் விடுமுறையின்போது _________ அரங்கத்திற்குச் சென்று ஒரு கேலிப்படத்தைக் கண்டேன். அங்கு நான், சாப்பிட பொரித்த சோளத்தை வாங்கினேன்.

a)

திறை

b)

திரை

9.

மணமக்கள் திருமணத்தின்போது தம் பெற்றோரின் ____________ பணிந்து ஆசி பெற்றனர். புதுமண தம்பதியினரைப் பெற்றோர் மனமார வாழ்த்தினர்.

a)

தாழ்

b)

தாள்

10.

பாலன் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வத்தோடு பள்ளிக்குச் சென்றான். போட்டி தொடங்கும் நேரத்தில் மழை ________ ஆரம்பித்ததால் போட்டிகள் நிறுத்தப்பட்டன.

a)

தூர

b)

தூற

11.

அண்மையில் இலங்கையில் நடந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க மீட்புப் படையினர் ________ உறக்கமின்றி பாடுபட்டனர் .

a)

ஊன்

b)

ஊண்

12.

அன்று பாடல் போட்டி நடைபெறவிருந்தது. அதில் ________________ மாணவர்களுக்கு இலவச ஒலிவட்டுகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

a)

சேறும்

b)

சேரும்