NEW
Font size
Worksheetsஒலிவேறுபாடு
Total questions: 10
Worksheet time: 5mins
ராமு பந்தை உதைத்தபோது கால் இடறிக் கீழே விழுந்தான். அதனால், அவன் ___________ தாங்க முடியாமல் கதறி அழுதான்.
வழி
வலி
ரேவதி தோட்டத்தில் இருந்தாள். அவள் மலரின் ____________ முகர்ந்து பார்த்தாள்.
மணத்தை
மனத்தை
அன்று பள்ளி விடுமுறை. அதனால், நான் என் ______________ சுத்தம் செய்தேன்.
அறையை
அரையை
வேடன் காட்டிற்குச் சென்றான். அவன் அங்குள்ள சிறு விலங்குகளை வேட்டையாட _____________ வைத்திருந்தான்.
பானத்தை
பாணத்தை
தேவன் மலை உச்சியை அடைந்தான். அதன் பின் அவன் தன் தாகத்தைத் ___________ தண்ணீர் அருந்தினான்.
தனிக்க
தணிக்க
மாலதி காலையில் எழுந்தாள். உடனே அம்மா அவளிடம், "முதலில் ____________ ; பின் காலை உணவைச் சாப்பிடலாம்," என்றார்.
குளி
குழி
அம்மா சந்தைக்குச் சென்றார். அவர் மாலாவுக்குப் பிடித்த ___________ ஒன்றை வாங்கி வந்தார்.
கனி
கணி
மீனா பூங்காவில் பட்டம் விட்டாள். திடீரென்று பட்டத்தின் கயிறு ____________ விட்டது.
அருந்து
அறுந்து
அன்று என் அப்பாவின் பிறந்தநாள். அதனால், பாட்டி அப்பாவுக்குப் பிடித்த கோழிக் ___________ சமைத்தார்.
கரியை
கறியை
டிசம்பர் மாதத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்து. அதனால், ____________ ஏற்பட்டது.
வெள்ளம்
வெல்லம்
