wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

இரண்டு தடிப்பமான கம்புகளைச் சேர்த்து வைத்து கட்டுவதற்கு உறுதியான _______________ மிகவும் துணை புரிந்தது.

a)

நாண்

b)

நான்

2.

காணாமல் போன பேனாவை வீட்டிலுள்ள _______________ முடுக்களில் தேடியும் அதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை

a)

மூலை

b)

மூளை

3.

_______ விடாது தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

a)

மாறி

b)

மாரி

4.

குளத்தில் பல ________ மலர்கள் பூத்திருந்தன. பலர்

அவற்றின் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.

a)

அள்ளி

b)

அல்லி

5.

பாலு ஒரு நாயை வாங்க விரும்பினான். ஆனால், அவனுக்கு நாய் _____________ சத்தம் என்றால் மிகவும் பயம்.

a)

குரைக்கும்

b)

குறைக்கும்

6.

முத்து சேற்றில் வழுக்கி விழுந்துவிட்டான். அதனால், அவனது சீருடையில் _______ பதிந்தது.

a)

கரை

b)

கறை

7.

நான் என் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த எண்ணினேன். அதனால். அன்றாடம் படிகள் _________ வீட்டுக்குச் செல்வேன்

a)

ஏரி

b)

ஏறி

8.

கீதா வானொலியில் அவளுக்குப் பிடித்தமான பாடலைக் கேட்டாள். அவள் வானொலியின் _______ அளவைச் சற்றுக் கூட்டி வைத்தாள்.

a)

ஒழி

b)

ஒலி