wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலிவேறுபாடு 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் பயன்படுத்தும் ஆயுதங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு _______________ உதவியாக இருக்கும்.

a)

அறம்

b)

அரம்

2.

குமரன் அணிந்த சட்டை அழுக்காக இருந்தது. அதைக் கூர்ந்து கவனித்தபோதுதான் அதில் _____________ இருந்தது தெரிந்தது.

a)

கரை

b)

கறை

3.

குதிரையின் _________________ அடிபட்டுவிட்டது. அதனால், அது நடக்க சிரமப்பட்டது.

a)

குளம்பு

b)

குழம்பு

4.

தேவி மற்றவர்களுக்கு உதவ விரும்புவாள். அதனால், அவள் _________________ என்றும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

a)

மணம்

b)

மனம்

5.

வெயில் காலத்திற்கு இளநீர் ஏற்ற _______________. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

a)

பானம்

b)

பாணம்

6.

வீட்டின் வெளியே காவலுக்கு நாய் இருக்கின்றது. அது அயலாரைக் கண்டால் _____________.

a)

குறைக்கும்

b)

குரைக்கும்

7.

ஊதுபத்தியின் _____________ வீடு முழுவதும் பரவியது. அதனை நுகர்ந்தவாறு அம்மா வாசலில் உட்கார்ந்திருந்தார்.

a)

மனம்

b)

மணம்

8.

மிருகங்கள் பெரும்பாலும் மனிதர்களைத் தாக்கும் ________________ உடையவை அல்ல. மனிதர்கள் அவற்றைத் தொந்தரவு செய்யும்போதுதான் அவை தாக்குகின்றன.

a)

தண்மை

b)

தன்மை

9.

அம்மா சக்கரைப்பொங்கல் செய்வார். அதில் _____________________ சேர்க்கும்போது பொங்கலின் சுவை கூடுகிறது.

a)

வெல்லம்

b)

வெள்ளம்

10.

சிங்கப்பூரில் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. அதனால், ஒரு _________________ விலை இங்கு மிகவும் அதிகமாக இருக்கின்றது.

a)

மணையின்

b)

மனையின்