NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்களும் இணைமொழிகளும்
Total questions: 15
Worksheet time: 8mins
வெளிநாட்டிலிருந்து வந்திருந்த தன் தாத்தா பாட்டியைப் பார்க்க கீதா ________________ சென்றாள்.
அடக்கவொடுக்கத்துடன்
உச்சிக்குளிர்ந்து
சிட்டாய்ப் பறந்து
அறக்கப் பறக்க
மாலா _______________ என்பதால் அவளிடம் யாரும் தங்களின் இரகசியங்களைக் கூறுவதில்லை.
ஓட்டைக்கை
இழுக்கடித்ததால்
ஓட்டைவாய்
தட்டிக் கழித்ததால்
பாலா பள்ளியில் சிறந்த மாணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்த அவனின் பெற்றோர் _______________.
சிட்டாய்ப் பறந்தனர்
உச்சிக்குளிர்ந்தனர்
தட்டிக்கொடுத்தனர்
தட்டிக் கழித்தனர்
சிறையிலிருந்து சிறைக்கைதி ____________________ முயன்றபோது பிடிபட்டான்.
ஓட்டம் பிடிக்க
கம்பி நீட்ட
தட்டிக்கேட்க
தட்டிக் கழிக்க
சில வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ___________________ விலைபோகாத தங்கள் பொருட்களை விற்றுவிடுகிறார்கள்.
அடக்கவொடுக்கத்துடன்
இனிக்கப்பேசி
ஆறப்போடாமல்
ஓட்டை வாயாக
ரகு செய்த தவறு அப்பாவுக்குத் தெரிந்தவுடன் அவன் பயத்தில் ________________ நின்றான்.
அடக்கவொடுக்கத்துடன்
ஆடாமல் அசையாமல்
சிட்டாய்ப் பறந்து
அறக்கப் பறக்க
தன்னை ______________________ யாரும் இல்லாததால் கண்ணன் மனப்போல போக்கில் ஊர் சுற்றித் திரிந்தான்.
தட்டிக் கொடுக்க
தட்டிக் கேட்க
தட்டிக்கழிக்க
வாலாட்ட
ராமன் தனக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளை _______________ வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.
தட்டிக்கேட்டதால்
இழுக்கடித்ததால்
ஆறப்போட்டதால்
தட்டிக் கழித்ததால்
பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் சிவராமன் தம் வகுப்பை நோக்கி ______________________ சென்றான்.
அவசரக் குடுக்கையாக
அறக்கப் பறக்க
ஓட்டம் பிடித்து
அந்தப் பெரிய குரங்கு, ஒரு சிறிய குரங்கிடமிருந்து பழத்தை ______________________ ஓடியது.
தட்டிப் பறித்து
வாலாட்டி
ஓட்டம் பிடித்து
சிட்டாய்ப் பறந்து
______________________ முடியாததால் சங்கர் தன் உடல் பருமனைக் குறைக்க முடியாமல் திண்டாடினான்.
தட்டிப் பறிக்க
வாலாட்ட
அள்ளிக் கொட்ட
வாயைக்கட்ட
பள்ளிக்குக் காலதாமதமாக வரக்கூடாது என ஆசிரியர் முரளியிடம் எவ்வளவோ கூறியபோதிலும் அவன் சிறிதும் ______________________.
தட்டிக் கேட்கவில்லை
தட்டிக் கொடுக்கவில்லை
செவி சாய்க்கவில்லை
வாயைக்கட்டவில்லை
மதி, தன் உறவினர் வீட்டுத் திருமண விருந்தில் கொடுக்கப்பட்ட உணவு வகைகளை _________________ உண்டு முடித்தான்.
ஆறஅமர
அடக்கவொடுக்கமாக
ஆடாமல் அசையாமல்
அவசரக்குடுக்கையாக
மாறன், கடையில் கண்ட பொம்மை தனக்கு வேண்டுமென்று தன் அப்பாவிடம்
கேட்டு ________________அடம்பிடித்தான்.
அடக்கவொடுக்கமாக
ஒற்றைக்காலில் நின்று
ஆடாமல் அசையாமல்
அவசரக்குடுக்கையாக
பள்ளிக்குப் புதிதாக வந்த தமிழாசிரியர் தன்னிடம் ______________ மாணவர்களைக் கண்டிக்காமல் அன்பாகக் கூறித் திருத்த முயற்சி செய்கிறார்.
அடக்கவொடுக்கமான
ஒற்றைக்காலில் நின்ற
வாலாட்டிய
அவசரக்குடுக்கயான
