NEW
Font size
Worksheetsவாக்கிய வகைகள்
Total questions: 15
Worksheet time: 9mins
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் தவறான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. அருணன் பழத்தைப் பறித்தான்.
B. சிறுவர்கள் திடலில் விளையாடுகிறான்.
C. மாலதி இறைவனை வணங்குகிறாள்.
D. பெரியவர் நாளிதழ் வாசிக்கிறார்.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் செய்தி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. தயவு செய்து அமைதியாக இருங்கள்.
B. புத்தகத்தைக் கிழிக்காதே!
C, தமிழ்மொழி செம்மொழிகளில் ஒன்றாகும்.
D. நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும்.
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
''முகுந்தா, நேற்று நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்,'' என நகுலன் கூறினான்.
A. நகுலன் நேற்று தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.
B. நகுலன் முன்தினம் நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.
C. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக நகுலனிடம் கூறினான்.
D. நகுலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகுந்தனிடம் கூறினான்.
கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம் என குழலி கனிமொழியிடம் கூறினாள்.
A. "கனிமொழி, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குழலி கூறினாள்.
B. "கனிமொழி, நான் கவிதை எழுத மிகவும் விரும்புகிறேன்," என்றாள குழலி.
C. "கனிமொழி, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குழலி.
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
A. பல அரிய வாழ்க்கை தத்துவங்கள் அடங்கிய திருக்குறள் திருவள்ளுவரால் வழங்கப்பட்டுள்ளது.
B. பூங்கோதை சிறப்பாகப் பாடினாள்.
C. பாரதியார் கருத்துள்ள பாடல்களைத் தந்துள்ளார்.
கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பா பாலாவிடம் விரைவாக மகிழுந்தைக் கழுவும்படிக் கூறினார்.
A. பாலா, ''அப்பா மகிழுந்தை விரைவாகக் கழுவு,'' எனக் கூறினார்.
B. ''விரைவாகக் கழுவு,'' என பாலா அப்பாவிடம் கூறினார்.
C. ''பாலா, விரைவாக மகிழுந்தைக் கழுவு,'' என அப்பா கூறினார்.
D. ''விரைவாக மகிழுந்தைக் கழுவுங்கள் அப்பா,'' என பாலா கூறினான்.
படத்திற்கேற்ற வாக்கிய வகையைத் தேர்ந்தெடு
செய்தி வாக்கியம்
உணர்ச்சி வாக்கியம்
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
1.பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
“நான் என் வீட்டுப் பாடத்தைச் செய்து முடித்து விட்டேன்,” என்றாள் அமுதா.
A. செய்தி வாக்கியம்
B. அயற்கூற்று வாக்கியம்
C. வினா வாக்கியம்
D. நேர்க்கூற்று வாக்கியம்
கொடுக்கப்பட்டுள்ள நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
”நான் நாளை பத்துமலைக்குச் செல்வேன்,” என்று சிவா ராதாவிடம் கூறினான்.
தான் மறுநாள் பத்துமலைக்குச் செல்வதாகச் சிவா ராதாவிடம் கூறினான்
அவன் பத்துமலைக்குச் செல்வான் என்று சிவா ராதாவிடம் கூறினான்.
அவன் நாளை பத்துமலைக்குச் செல்வதாகச் சிவாராதாவிடம் கூறினான்.
தான் மறுநாள் பத்துமலைக்குச் செல்வதாக ராதா சிவாவிடம் கூறினான்.
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான நேர்க்கூற்று பொருளைத் தெரிவு செய்க.
ஒருவர் கூறிய கூற்றை நாம் மற்றவரிடம் கூறும்போது, அவர் கூறியபடியே ஒரு சொல்லையும் மாற்றாது முன்னிலையிடத்திற்கேற்பக் கூறுவதாகும்.
ஒருவர் கூறிய கூற்றை அல்லது சொற்களை மட்டும் மாற்றிப் பொருள் ஏதும் மாறாதவாறு படர்க்கையிடத்திற்கு ஏற்ப கூறுவதாகும்.
ஒருவர் கூறிய கூற்றை நாம் மற்றவரிடம் கூறும்போது, அவர் கூறியவாறே எழுதாமல் நாம் அக்கருத்தை மேற்கொண்டு விவரித்துக் கூறுவதாகும்.
ஒருவர் கூறிய கூற்றை நாம் மற்றவரிடம் கூறும்போது, அவர் கூறியபடியே ஒரு சொல்லையும் மாற்றாது தன்மையிடத்திற்கேற்பக் கூறுவதாகும்
கொடுக்கப்பட்டுள்ள் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
முன்தினம் தினகரன் விபத்துக்குள்ளானதாக அன்பழகன் கூறினான்.
”நேற்று தினகரன் விபத்துக்குள்ளானான்”, என்றான் அன்பழகன்.
”மறுநாள் தினகரன் விபத்துக்குள்ளானான்”, என்றான் அன்பழகன்.
மறுநாள் விபத்துகுள்ளானான் தினகரன் என்று அன்பழகன் கூறினான்.
”நேற்று தினகரன் விபத்துக்குள்ளானான்” என்றான் அன்பழகன்.
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
திருநாவுக்கரசர், “என் கடன் பணி செய்து கிடப்பது,” என்றார்.
தன் கடன் பணி செய்வது தான் என்கிறார் திருநாவுக்கரசர்.
தமது கடன் பணி செய்து கிடப்பது என்கிறார் திருநாவுக்கரசர்.
தன் கடன் பணி செய்து கிடப்பது என்றார் திருநாவுக்கரசர்.
தமது கடன் பணி செய்வதாகத் திருநாவுக்கரசர் கூறினார்.
கீழ்க்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டுள்ள சொல்லுக்கேற்ற அயற்கூற்று சொல்லைத் தெரிவு செய்க.
“நேற்று காலையில் நாங்கள் திடலில் பந்து விளையாடினோம்” என்றான் ரவி.
மறுநாள், தங்கள்
முன்னாள், தங்கள்
மறுநாள், தாங்கள்
முன்னாள், தங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
“நான்வாகனத்தை விற்கப் போகிறேன்,” என்று கமலன் மாலினியிடம் கூறினான்.
தான் வாகனத்தை விற்கப் போவதாக கமலன் மாலினியிடம் கூறினான்.
தன் வாகனத்தை விற்கப் போவதாக கமலனிடம் மாலினி கூறினாள்.
தான் வாகனத்தை விற்கப் போவதாக கமலனிடம் மாலினி கூறினாள்.
தன் வாகனத்தை விற்கப் போவதாக கமலன் மாலினியிடம் கூறினான்.
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற அயற்கூற்று சொல்லைத் தெரிவு செய்க.
“நாளை என் அப்பா பள்ளிக்கு வருவார்,” என்று சரண் தன் தோழி ராதாவிடம் கூறினான்.
மறுகணம்
மறுநாள்
மாறுநாள்
மறுவாரம்
