wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழியும் பொருளும்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதன் பொருள் என்ன ?

a)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்

b)

தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்.

2.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதன் பொருள் என்ன ?

a)

எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

b)

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.

3.

திருமதி கவிதா நடனத் துறையில் முறையாகப் பயின்று இன்று நாடளவில் பெரிய நடனக் கலைஞராகத் திகழ்கிறார் என்ற சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

4.

கொரோனா கால விடுமுறையை அகிலன் கணினியைக் கற்றுக் கொள்ள பயன்படுத்திக் கொண்டான் என்ற சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

5.

சிறுவயது முதல் நீச்சல் பயிற்சியைக் கற்ற குமுதினி, இன்று பள்ளியைப் பிரதிநிதித்துப் பல போட்டிகளுக்குச் சென்று வாகை சூடுகிறாள் என்ற சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

6.

பல்கலைகழகம் செல்லும் வாய்ப்புக் கிடைக்கும் மாணவர்கள் தங்களின் இலக்கை அடைய அயராது உழைத்து வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

7.

எத்துறையானாலும் முறையாகப் பயிற்சி செய்வதே சிறப்பாகும் என்பதற்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

8.

யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பைப் பயன்படுத்திப் புகழேந்தி அறிவியல் துறையில் பல சாதனைகளைச் செய்து புகழ் பெற்றான் என்ற சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்