wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் (படிவம் 3)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சரியான வல்லின எழுத்துகளைத் தெரிவு செய்க.

a)

க், ச், ய், ர், ப், ற்

b)

க, ச, ட, த, ப, ர

c)

க், ச், ட், த், ப், ற்

d)

க், ச், த், ய், ர், ல்

2.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

ஞ, ம, ப, ர = வல்லினம்

b)

ங, ந, ஞ, ண = மெல்லினம்

c)

க, வ, ஞ, ள = இடையினம்

3.

இன எழுத்தைக் கொண்டிராத திருக்குறளைத் தெரிவு செய்க.

a)

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.

b)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.

c)

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

4.

இனவெழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

பஞ்சம்

b)

மட்டை

c)

ஒன்பது

d)

கிண்ணம்

5.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் அகச்சுட்டைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

அப்பையன்

b)

இவள்

c)

இந்நாடு

d)

அவ்வூர்

6.

'ஏ' என்ற வினா எழுத்துச் சொல்லின் __________________ வரும் எழுத்தாகும்.

a)

முதலில்

b)

இறுதியில்

c)

இடையில்

d)

முதலிலும் இறுதியிலும்

7.

ஒரு சொல்லின் முதல் எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து அதே பொருளை உணர்த்துமாயின் ____________ எனப்படும்.

a)

இடைப்போலி

b)

போலி

c)

முதற்போலி

d)

கடைப்போலி

8.

நாற்காலி, மரம், கல்

மேற்கண்ட சொற்கள் எவ்வகையைச் சார்ந்தவை? 

a)

திரிச்சொல்

b)

திசைச்சொல்

c)

இயற்சொல்

d)

வடசொல்

9.

கீழ்க்காணும் பதில்களில், சரியான தற்சம வடசொல்லைக் கண்டறிந்து குறிப்பிடுக.

a)

புஷ்பம்

b)

அனுபவம்

c)

விஷம்

10.

ஒரு வாக்கியத்தில் _____________ ஏற்காத வினைமுற்றைக் குன்றியவினை என்பர்.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுப்பொருள்

11.

கீழ்காண்பனவற்றுள் சரியான குன்றியவினை வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்.

b)

சிங்கம் கர்ஜித்தது.

c)

பாலா காற்பந்து விளையாடினான்.

d)

அப்பா என்னை திட்டினார்.

12.

______________ என்பது பொருள்களின் குணம், தொழில் ஆகிய பண்புகளைக் குறிக்கின்றது.

a)

திசைச்சொல்

b)

வடசொல்

c)

உரிச்சொல்

d)

இயற்சொல்

13.

அரண்மனை அரசனால் ஆளப்பட்டது.

மேற்காணும் வாக்கியத்தில் எது எழுவாயைக் குறிக்கிறது?

a)

ஆளப்பட்டது

b)

அரண்மனை

c)

அரசன்

14.

புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

ஐந்து

b)

நான்கு

c)

மூன்று

d)

இரண்டு

15.

அத்தலைவன்


மேற்கண்ட சொல் விகாரப் புணர்ச்சியில் எவ்வகையில் சார்ந்தது?

a)

தோன்றல்

b)

திரிதல்

c)

கெடுதல்