Worksheetsஒலி வேறுபாடு - வாரம் 6 (வியாழன்)
Total questions: 13
Worksheet time: 7mins
வெயில் அதிகமாக இருந்ததால் எனக்குத் தாகமாக இருந்தது. குளிர்பானம் அருந்தியதும் என்
தாகம் _________________.
தணிந்தது
தனிந்தது
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. அதனால், ________________ உடைந்து
ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
அனை
அணை
கிராமத்தில் எலி தொல்லை தாங்க முடியவில்லை. அதனால், அக்கிராமத்து மக்கள் வீட்டுக்கு ஓர் எலி _________________ வாங்கி வைக்க முடிவு செய்தனர்.
பொறி
பொரி
சிறுவர்கள் கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, நண்டுகள் __________________ நுழைந்தன.
வலைக்குள்
வளைக்குள்
சிறுவர்கள் பாரம்பரிய விளையாட்டான கபடியை விளையாடினர். பிறகு, ________________ வைத்து விளையாடி மகிழ்ந்தனர்.
கோழியை
கோலியை
தூக்கத்திலிருந்து திடீரென்று எழுந்த
குழந்தை அழுதது. உடனே, அம்மா அதைத் தூக்கி ______________ கொண்டார்.
அணைத்து
அனைத்து
பள்ளியில் உள்ள குளத்தில் நிறைய மலர்கள் இருந்தன. அவற்றுள் ______________ மலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
அல்லி
அள்ளி
தேர்வு நெருங்கிக்கொண்டிருந்தது.
அதனால், மாணவர்களுக்குப் புரியாத பாடங்களை ஆசிரியர் ______________ கூறினார்.
விளக்கி
விலக்கி
சிறுவர்கள் தங்களின் ஓய்வு _____________ திடலுக்குச் சென்று இன்பமாக விளையாடுகின்றனர். இதனால் அவர்களின் உடலும் உள்ளமும் வலுவடைகின்றனர்.
வேலைகளில்
வேளைகளில்
நான் குளத்தில் நீந்திய ______________ பார்த்தேன். அதன் அழகில் மெய்ம்மறந்து போனேன்.
அண்ணத்தை
அன்னத்தை
பலர், மிருகங்களின் _________________________ செய்யப்பட்ட பொருள்களை வாங்குகின்றனர். இதனால், சில மிருக இனங்கள்
அழிந்து போகின்றன.
தோலால்
தோளால்
மாணவர்கள் நேரத்தை ஒரு ____________ கூட வீணாக்காமல் நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
கணத்தை
கனத்தை
கனத்த ____________ பெய்து வெள்ளப் பெருக்கை
உண்டாக்கியது. இதனால் மக்கள் பலர் திண்டாடினர்.
மாரி
மாறி
