wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

L4

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

என் தாத்தா மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த ஆண்டு அவருக்கு ____________ வயதாகிறது.

a)

எண்பது

b)

என்பது

2.

வீட்டின் வாசலில் ஒரு நாய் காவல் காத்துக்கொண்டிருந்தது. அவ்வழியாகச் சென்றவர்களைப் பார்த்து ____________ கொண்டேயிருந்தது.

a)

குரைத்து

b)

குறைத்து

3.

அம்மா உடல் ஆரோக்கியத்துடன் இருக்க தினமும் உடற்பயிற்சி செய்வார். அவர் மாலை ____________ மெதுநடை நடப்பார்.

a)

வேலையில்

b)

வேளையில்

4.

இந்தோனேசியாவில் உள்ள தோபா ______________ மிகவும் அழகானது. அதன் நீர் சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும்.

a)

ஏறி

b)

ஏரி

5.

போட்டியில் பங்குபெற பலர் தங்கள் விடை படிவங்களைப் பெட்டியில் போட்டனர். வெற்றியாளர்கள், ______________ முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

a)

குலுக்கல்

b)

குழுக்கள்

6.

திரு மாறன் ஒரு புதிய வீட்டை வாங்கினார். அவர் அடுத்த மாதம் புது ______________ புகுவிழா ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளார்.

a)

மணை

b)

மனை

7.

சிலர் தங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில முடிவுகளை எடுப்பர். அவ்வாறு எடுக்கப்படும் முடிவு, நமக்குச் சாதகமாக இல்லாவிடில் நாம் அவர்களைத் தவறாக ______________ கூடாது.

a)

என்ன

b)

எண்ண

8.

எலிகள் தொல்லை அதிகமாக இருந்தது. அதனால், அவற்றை ஒழிக்க கடைக்காரர் ________________ ஒன்றை வைக்க நினைத்தார்.

a)

பொரி

b)

பொறி

9.

அப்பா ஈரமான ஆடைகளைக் காய வைக்க ஒரு கயிறு கட்டினார். பலத்த காற்று அடித்ததால் அது ______________ விழுந்தது.

a)

அறுந்து

b)

அருந்து

10.

அன்று ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டிய வீட்டுப்பாடத்தைக் காணவில்லை. அதனால் ரகு “அம்மா _________________ வீட்டுப்பாடத்தைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

a)

எண்

b)

என்

11.

ராமன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கீழே விழுந்து விட்டான். அதனால் அவனுடைய சட்டை முழுதும் ______________ இருந்தது.

a)

கரையாக

b)

கறையாக

12.

மாலதி கடலோரப் பூங்காவுக்குச் சென்றாள். அங்கு மலர்களின் ______________ எங்கும் வீசி இருந்தது.

a)

மணம்

b)

மனம்